இந்தி எழுத்துக்கள் அழிப்பு பொள்ளாச்சி:
மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பிறகு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரயில் நிலையங்களில், பெயர் பலகை யில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்தனர். பொள்ளாச்சியில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை ரயில் நிலை யத்துக்கு கொடிகளுடன் சென்ற திமுகவினர் சிலர், ரயில் நிலைய நடைமேடையில் இருந்த பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை அழித்து, ‘தமிழ் வாழ்க’ என்று எழுதினர்.
விசாகா கமிட்டி மறுசீரமைப்பு
சென்னை: தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைப்பு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால், ஐபிஎஸ் அதிகாரி சீமா தலைவராக தொடர்வார் என தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தினர் 2 பேர் கைது!
திருப்பூர்: கருமாரம்பாளையம் பகுதியில் சட்ட விரோத மாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். கைதான ஹுசைன் (45), இப்ராஹிம் (33) இரு வரும் திருப்பூரில் 9 ஆண்டுகளாக தங்கி, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள் ளது. அதில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவை வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த சேவை யானது 2 திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடக்கப் பள்ளிகளுக்கு (50 எம்பிபிஎஸ் வேகம்) ரூ.710-ம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு (100 எம்பிபிஎஸ் வேகம்) ரூ.900 இணையச் சேவை கட்டணமாக விடுவிக்கப்படும். இணையச் சேவைக்கான மாதாந்திர கட்டணம், வரும் ஏப்ரல் மாதம் முதல் இயக்குநரகம் வாயி லாகவே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நேரடியாக செலுத் தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி ஆசிரியை சஸ்பெண்ட்
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி விஷ்யாஷ்ரம் பள்ளியில் இந்தி கவிதை சொல்லாத தால், 3 ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய இந்தி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவனை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டேன் என மிரட்டி தொடர்ந்து தாக்கியதாக பெற்றோர் அளித்த புகாரின்படி, பள்ளி நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொண்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கையில், மகா சிவராத்திரியையொட்டி திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏது வாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்தும், பெங்களூருவிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் பிப்.25 அன்று சென்னை – பெங்களூருவிலிருந்து பல்வேறு இடங் களுக்கும், பிப்.26 அன்று மேற்கண்ட இடங்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.
கட்டாய ஓய்வு சரியே!
சென்னை: மனைவி பெயரில் வாங்கிய சொத்துக்கள் குறித்து முறைப்படி உயர் நீதிமன்றத்துக்கு தகவல் தெரி விக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு அளித்தது சரியே என வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதி பதிகள் தீர்ப்பளித்துள்ளனர்
‘பஞ்சு மிட்டாய் விற்கும் அவலம்’
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் நடந்த திமுக விழாவில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “ஹிந்தியை தாய் மொழி யாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் படித்தவர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்கின்றனர். ஆனால் தமிழகத்தில் இரு மொழி படித்தவர்கள் பல்வேறு நாடுகளில் மருத்துவர்களாக, பட்டப்படிப்பு முடித்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். 4000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழியை பாரத அமைச்சர்கள் பேசுவது பெருமையாக உள்ளது. ஆனால் இந்தியை திணிப் பது வேதனையாக உள்ளது” என்றார்.
சீமான் மீது குற்றப்பத்திரிகை?
சென்னை: நடிகை விஜயலட்சுமி பலாத்காரம் செய்யப் பட்ட விவகாரத்தில் சீமான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக நடிகை விஜய லட்சுமி கடந்த 2011-இல் காவல்துறையில் புகாரளித்தார்.வைகோ கண்டனம் சென்னை: தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழி திட்டத்தையும் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளை தொ டங்குவதற்கு மாநில அரசின் அனுமதியே தேவை யில்லை என்று விதிகளை திருத்துவது ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற் கான இன்னொரு செயல் திட்டம்தான் என்பதில் ஐய மில்லை. ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலுக்கு மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ கண்டம் தெரி வித்துள்ளார்.