விண்வெளியில் சூரிய மின் பலகைகளில் இருந்து ஆற்றல் உற்பத்தி
விண்வெளியில் நிறுவப்படும் சூரிய மின் பலகைகள் 2050 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பாவின் மின் தேவையை 50% பூர்த்தி செய்யும். இந்த முறை ஒழுங்கற்ற மற்றும் வானிலையை நம்பி இயங்கும் புவி அடிப்படை மின் கல விநியோகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஐரோப்பியக் கண்டத்தின் வருங்கால மின் கட்டமைப்பிற்கான கணினி மாதிரியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்தனர். சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் பிரம்மாண்டமான கண்ணாடிகள் நாசாவால் வடிவமைக்கப்பட்ட விண் வெளியில் செயல்படும் சூரிய சக்தி மின் பலகை கள் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் ஆற்றல் கட்ட மைப்பின் செலவுகளை அதிகபட்சம் 15% குறைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்ற னர். மின் கலன்களின் தேவையையும் இது மூன்றில் இரண்டு பகுதிக்கும் கூடுதலாக குறைக்க உதவும். லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு விண்வெளி சூரிய ஆற்றலிற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிட நடத்தப்பட்ட முதல் ஆய்வு. இது விண்வெளியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சூரிய ஆற்றல் திட்டம் (Space-based solar power SBSP) என்று அழைக்கப்படுகிறது. நேர்மறைப் பயன்க ளைத் தந்த இந்த ஆய்வில் நாசா உரு வாக்கிய ஹெலியோஸ்டேட் (heliostat) வடி வத்தில் அமைந்த மின் பலகைகள் பயன் படுத்தப்பட்டன. பெரிய கண்ணாடிகள் போல சூரிய ஒளியை பிரதிபலிக்கும் பிரதிபலிப்பான் களைக் இந்த சூரிய ஒளி பிறகு டிரான்ஸ்மிட் டர்கள் மூலம் பூமியில் உள்ள நிலையங்க ளுக்கு கடத்தப்பட்டு மின்சாரமாக மாற்றப்படு கிறது. இந்த ஆற்றல் பிறகு ஒரு மின் விநி யோகக் கட்டமைப்பிற்கு அனுப்பப்படுகிறது. இந்த கணினி மாதிரி கட்டமைப்பு 33 நாடுகளில் உள்ளது. இவை ஐரோப்பாவின் மின் தேவை யை குறைந்த செலவில் அடையாளம் காண உதவும் வகையில் மின் பற்றாக்குறை, உற்பத்தி மற்றும் சேமித்து வைப்பதைத் தூண்டுகின்றன. ஆய்வாளர்கள் இந்த விண்வெளி சூரிய மின் பலகை ஆற்றல் (எஸ் பி எஸ் பி கருத்தை நாசாவின் ஆற்றல் திறன் பற்றிய மாதிரி கணிப்பு களுடன் ஒருங்கிணைத்து ஆராய்ந்தனர். இம்முறை ஐரோப்பாவின் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்த புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தேவையை 80% நிறைவு செய்யும். நிலப்பரப்பை சார்ந்துள்ள புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஒழுங்கற்றது. வானிலையை நம்பியுள்ளது. இதன் விநி யோகம் நம்பகத்தன்மை சிக்கல்களை உடை யது. வேறுபட்ட செலவுகளை ஏற்படுத்துகிறது. இது இப்போது உள்ளவற்றுக்கு மாற்றான மையப்படுத்தப்பட்ட ஆற்றல் உற்பத்திக்கு உதவும். வளிமண்டலத்திற்கு மேற்பகுதியில் அமைந்துள்ள சூரியனின் மூலவளம் தொடர்ச்சியான கிகாவாட் அளவில் சக்தியை உற்பத்தி செய்யும் இயல்புடையது. வட்டப் பாதை நெரிசல், ஆற்றல் கடத்தலில் குறுக்கீடு கள், சூரிய ஒளிக் கதிர்களில் ஏற்படும் வேறுபாடு களால் இதன் நம்பகத் தன்மை மற்றும் இயக்கத் திறன் பாதிக்கப்படலாம். ஜப்பானின் முன் மாதிரி செயல்பாடு கட்டுமானம், ஏவுதல் மற்றும் பராமரிப்பு போன்ற தொழில்நுட்பங்களுக்கு ஆகும் செலவுகள் குறையும்போது, 2050 இல் இத்திட்டத்தின் பலன்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறு கின்றனர். குறைந்த செலவிலான தொழில்நுட் பங்கள் இவற்றுக்கு ஆகும் செலவை வெகு வாகக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை ஜூல் (Joule) என்ற இதழில் வெளிவந்துள்ளது. “மிதமிஞ்சிய சூரிய பலகைகள் விண்வெளி யில் இருந்தால் அவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளுமா அல்லது விண்வெளி குப்பைகளால் சேதப்படுத்தப்படுமா போன்ற சில ஆபத்துகள் இத்திட்டத்தில் உள்ளன என்றாலும் இம்முறை நாடுகள் சுழிநிலை கார்பன் என்ற குறிக்கோளை அடைய பெரி தும் உதவும். மனிதர் என்ற முறையில் புதை படிவ எரிபொருட்களை இம்முறையில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்தியாக மாற்றலாம் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நன்மை. விண்வெளி சார்ந்த சூரிய சக்தி என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில்நுட்பம். இது வற்றாத ஆற்றல் மூலத்தை பயன்படுத்தி செயல்படுவதால் இதன் மூலம் தொடர்ச்சி யான மின்னாற்றலைப் பெறமுடியும்” என்று ஆய்வுக் குழுவின் முன்னணி ஆசிரியரும் லண்டன் கல்லூரியின் பொறியியல் துறை மூத்த பேராசிரியருமான டாக்டர் வொய் ஹீ (Dr Wei He) கூறுகிறார். ஜப்பான் ஏற்கெனவே இந்த முறையை உரு வாக்கி அதை விண்வெளி மற்றும் சுழிநிலை கார்பன் உமிழ்விற்கான கோட்பாட்டுடன் ஒருங்கிணைத்துச் செயல்படுகிறது. இதை ஐரோப்பாவும் மற்ற உலக நாடுகளும் பின்பற்ற லாம். ஐரோப்பா கண்டம் முழுவதும் நீண்ட காலமாக தோழமையுடன் தொடரும் ஐரோப் பிய விண்வெளி முகமையின் செயல்களின் கீழ் நடைபெற்று வரும் எல்லைகள் தாண்டி யுள்ள மின்னாற்றல் பகிர்வு மற்றும் செயற் கைக்கோள் திட்டங்களில் நிலவும் ஒத்துழைப் பின் மூலம் இம்முறையை பின்பற்றலாம் இதனால் ஐரோப்பாவில் ஒரு மையப் படுத்தப்பட்ட மின் உள் கட்டமைப்பை உரு வாக்கலாம். கண்டம் முழுவதற்குமான நிலை யான, புதுப்பிக்கக்கூடிய விநியோகத்தை பெற லாம். இதனால் எரிவாயுவை சார்ந்து இயங்கும் நிலை மாறும். செயல்பட இதுவே சரியான தரு ணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
