தமிழக அரசுக்கு மாதர் சங்க சிறப்பு மாநாடு வலியுறுத்தல்
திருவள்ளூர், பிப் 16- உயர்நீதிமன்ற உத்தரவின் படி நுண் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருத்தணியில் சனிக்கிழமை யன்று (பிப் 15), நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று சீரழிந்த குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. அனைத்து தரப்பு பெண்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருத்தணி வட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம். அந்த மக்கள் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்று தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை மோச மாக சென்றுள்ளது
. திருத்தணி அருகில் உள்ள கன்னிகா புரத்தில் தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதால் அந்த குண்டர்க ளுக்கு பயந்து வீட்டின் சாவியை கூட வாங்காமல் ஊரையே காலி செய்துள்ளனர். இப்படி ஊருக்கு 10 பேர் ஊரை விட்டு காலி செய்துள்ள கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நுண்நிதி நிறுவனங்களுக்கு பயந்து காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என திருத்தணி காவல் நிலை யத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் புகார் கொடுத்தும் இதுவரை ஒரு வரையும் கண்டு பிடிக்கவில்லை. அந்த மக்கள் என ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை.
ஆர்.கே.பேட்டை ஒன்றி யத்தில் அதிக அளவிற்கு பழங்குடி மக்கள் கொத்தடிமைகளாக உள்ளனர். இவர்களை அரசால் மீட்க முடியவில்லை. திரு வாலங்காடு, பூண்டி, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நுண் நிதி நிறுவனங்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடம்பத்தூரை அடுத்த பிஞ்சி வாக்கத்தில் மீட்கப்பட்ட கொத்த டிமை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வுக்காக செங்கல் சூளை தொழிலை அரசு அதி காரிகளே முடக்கிவிட்டனர். இப்படி அரசு திட்டங்களை அரசு அதிகாரிகளே அமல்படுத்தாத, மோசமான போகும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலவுகிறது. இப்படி நுண்நிதி நிறுவனங்களால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று (பிப் 15), திருத்தணியில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. நுண் நிதி நிறுவனங்களால் சீரழியும் குடும்பங்களை மீட்க வேண்டும், பெண்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும், பெண்கள் சுய தொழில் தொடங்க அரசு வங்கி கள் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது.
சிறப்பு தீர்மானம்
ஏழை, எளிய மக்களின் உயிரைக் குடிக்கும், நவீன கந்து வட்டி முறையை பின்பற்றும், நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்த சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்க ளுக்கும் மற்றும் சுயஉதவி குழுக்களில் உள்ள பெண்க ளுக்கு மாநில அரசு ஆண்டுக்கு நான்கு சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் கொடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பி.சுகந்தி
மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி பேசுகையில், மக்களின் உழைப்பெல்லாம் நுண்நிதி நிறுவனங்களிடம் கொட்ட வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பரிதவித்து வருகிறார்கள். வறுமையின் பிடியில் உள்ளவர்கள் தான், நுண் நிதி நிறுவனங்களில் சிக்கிக் கொண்டுள்ளனர். நுண் நிதி நிறுவனங்களின் அராஜ கத்தை தடுத்துநிறுத்த சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம் என்றார்.
4விழுக்காடு வட்டியும் 36 விழுக்காடு வட்டியும்
திருவள்ளூர் மாவட்டச் சேர்ந்த மூன்று பெண்கள் கடன் வலையில் சிக்கிக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டனர் இப்படி தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் ஏராள மான பெண்கள் உள்ளனர். அந்த அளவிற்கு இந்த நிறுவ னங்கள் பெண்களை கசக்கி பிழை கின்றனர். சுய உதவிகுழுக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சேமிப்பு பழக்கத்தை உரு வாக்குவதற்குதான். பத்தாயிரம் ரூபாய் சேமித்தால், வங்கி பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு சிறு தொழில் தொடங்க முடியும். குழந்தை களுக்கு கல்வி செலவு என பயன்படுத்த முடியும் ஆனால் தனியார் நிதி நிறுவனங்கள் அரசு வங்கியில் 4 சதவீதத்திற்கு பணத்தை வாங்கி, சாதாரண மக்களிடம் 36 சதவீதத்திற்கு வட்டி வசூல் செய்கின்றனர். இதனை தாங்க முடியாமல் மக்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை முறைப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தர விட்டு 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அதிமுக, திமுக அரசுகள் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது என்றார்.
எஸ்.வாலண்டினா
மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா பேசும் போது, வறுமையின் பிடியில் உள்ளதால் கடனில் சிக்கி தவித்து கொண்டிருக்கிற குடும்பங்களை மீட்டெடுப்பதற்கு தமிழ்நாட்டில் இதுவரை நான்கு மண்டலங்களில் பெண்கள் பாதிப்பு குறித்து மாநாடுகள் நடத்தியுள்ளோம்.சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, தஞ்சை ஆகிய 4 மையங்களில் மாநாடுகள் நடத்திருக்கிறோம். அந்தப் பகுதிகளில் நடத்திய ஆய்வில், 30 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு நுண்நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன. பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் குடும்பங்களுக்கு கடன் கொடுக்கின்றன. விதவை, கண வனால் கைவிடப்பட்ட பெண்கள், நிலமற்ற குடும்பத்தில் உள்ள வர்கள் என தேர்வு செய்து 99 விழுக்காடு கடன் கொடுக்கி றார்கள் என்ற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இவர்களுக்கு 100 நாள் வேலை தான் ஆதாரமாக இருந்து வருகிறது.
அதிலும் முழுமையாக வேலை இல்லை, முழு கூலி ரூ. 319 வழங்காததால் சிரமப்படுகின்றனர். 95 சதவீதம் பேர் வாடகை வீட்டில் குடி யிருக்கிறார்கள். இந்த நிலை யில் கடனை கட்டவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை எடுக்கிறார்கள். இதற்கு பயந்து பலர் உரிய விட்டு வெளி யேறும் மோசமான நிலை நிலவு வதால், நுண் நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள கடன்களை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வாலண்டினா வலியுறுத்தினார். சிறப்பு மாநாட்டிற்கு மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.மோகனா தலைமை தாங்கி னார். ஜி.சந்தியா வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பி.பத்மா, மாவட்டப் பொருளாளர் பி.சசிகலா, மாவட்ட நிர்வாகிகள் என்.கீதா, எஸ்.ரம்யா, கே.கவிதா, எம்.காமாட்சி, கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சி.பெருமாள், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.அப்சல்அகமது, சிபிஎம் வட்டச் செயலாளர் வி.அந்தோணி ஆகியோர் பேசினர். முன்னதாக மாதர் சங்க நிர்வாகி சர்புநிஷா கவிதை வாசித்தார். கே.குமாரி நன்றி கூறினார்.