மதுரை
அவசர தேவைக்கான பயண அனுமதி சீட்டை இணையதளத்தில் மட்டுமே பெற முடியும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் அதிகரித்து 87 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து நோய் தொற்று சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மக்கள் தங்களுடைய அவசர பயணங்களுக்கு அனுமதி சீட்டு பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக மாநில அரசு வழங்கும் பயண சீட்டுக்கான E-pass கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளதால் http://tnepass.tnega.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அனுமதி சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது