42 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மின் ஊழியர்கள், ஓய்வூதியர்கள், பொறியாளர்கள் வாரிய தலைமையகம் முன்பு கூட்டு முறையீடு
சென்னை, டிச. 18 - காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வியாழனன்று (டிச.18) சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகம் முன்பு கூட்டு முறையீடு போராட்டம் நடை பெற்றது. மின்சார சட்டத்திருத்த மசோதா - 2025ஐ திரும்பப் பெற வேண்டும், 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப கட்ட காலிப் பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும், 9 ஆயிரத்து 600 கேங்மேன்களை கள உதவி யாளர்களை பதவி மாற்றம் செய்ய வேண்டும், தமிழக மின்வாரியம் மறு சீரமைப்பையொட்டி ஏற்பட்ட ஒப்பந்தத்தை மறுபரி சீலனை செய்ய வேண்டும், வாரிய ஆணை-2ஐ முழுமை யாக திரும்பப் பெற வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றிய காலத்தை கணக்கில் கொண்டு ஓய்வூதி யப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாரிய தலைமையகம் முன்பு இந்த பெருந்திரள் கூட்டு முறையீடு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு, தமிழ்நாடு மின்துறை பொறி யாளர் அமைப்பு, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின. மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்வியக்கத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மின் ஊழியர் அமைப்பு மாநில பொதுச் செயலாளர் தி. ஜெய்சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை யாற்றினர். மத்திய அமைப்பின் பொருளாளர் வெங்கடேசன், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் அப்பாதுரை, பொதுச்செயலாளர் அருள்செல்வன், பொருளாளர் அறிவழகன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலை வர் எஸ். ஜெகதீசன், பொதுச்செய லாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியம், பொருளாளர் பழனி உள்ளிட்டோர் பேசினர்.
