வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் தமிழகத்தில் 12.43 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
சென்னை, டிச. 30 - தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நடவடிக்கைகளில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளனர். புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணி, ஜனவரி 18 வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 17 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 12.43 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 2.37 லட்சம் பேர், திருவள்ளூரில் 1.85 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவர்களின் உறவினர்களின் பெயர் குறித்த விவரங்களை தராத வாக்கா ளர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த நோட்டீஸ் பெற்ற வர்கள் தேர்தல் ஆணையம் அங்கீ கரித்த 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன் வாக்குச்சாவடி அலுவல ரைத் தொடர்புகொண்டு நேரில் ஆஜ ராக வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.