மதுரை, மே16- புலம் பெயர் தொழிலாளர்கள் இல்லை யென்றால் அவர்கள் பணியாற்றிய மாநி லங்களில் தொழிற்துறை நின்றுவிடும் என தமிழ்நாடு வர்த்தக சபை தனது கவலை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேலு, தலைவர் என்.ஜெகதீசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்திந்திய அளவில் எட்டு கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள் எனக் கூறியுள்ள தகவல் ஆச்சரியமாக உள் ளது. கொரோனா பாதிப்பு சூழ்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநி லங்களுக்கு திரும்ப வேண்டும். குடும்பத்தி னரைப் பார்க்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கோடிக்க ணக்கில் பல்வேறு தொழில் வணிகத் துறை களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார்கள்.
ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரும் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிவிட்டால் அவர்கள் பணியாற்றிய மாநிலங்களில் தொழில்துறை அப்படியே செயல்படாமல் நின்றுவிடும். லட்சக்கணக்கில் திரும்பி வரும் தொழிலாளர்களுக்கு பீகார், ஒடிசா, அசாம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிர தேசம் போன்ற மாநிலங்களில் உடனடி யாக வேலை வாய்ப்பு அளித்துவிட முடியாது என்பது உண்மை. இந்தச் சூழலில் பலர் அந்த மாநிலங்களி லிருந்து வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லத் தயாராக இருக்கி றார்கள். எனவே, அந்த மாநிலங்களிலிருந்து அவர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்க ளுக்குச் செல்ல ரயில், பேருந்து போக்கு வரத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். இங்கிருந்து தொழிலாளர்கள் செல்கிற அதே நேரத்தில் அங்கிருந்தும் வர வேண்டும். அப்பொழுது தான் நம் தொழில் வணிகத் துறை இன்னொரு ஊரடங்கிலி ருந்து விடுபடமுடியும். இக்கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்கவேண்டும்.