tamilnadu

img

எடப்பாடி பழனிசாமிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு!

எடப்பாடி பழனிசாமிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு!

சென்னை, ஜூலை 5 - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றிய அரசின்  உள்துறை அமைச்சகம், ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.  முன்னதாக, எடப்பாடி பழனி சாமிக்கு, ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு  வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே,  2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன் னிட்டு கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து  ஜூலை 7 முதல் எடப்பாடி பழனி சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்குப் பின்னர் தமிழ் நாட்டில் ‘இசட் பிளஸ்’ பாது காப்பு (கருப்புப் பூனைப்படை) இதுவரை எந்த தலைவருக்கும்  வழங்கப்படவில்லை. தற்போது  அது எடப்பாடி பழனி சாமிக்கு வழங்கப்பட்டு உள்ளது.  இந்த ‘இசட் பிளஸ்’ பாது காப்பு, மிக மிக உயரிய பாதுகாப்பு  பிரிவாகும். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் மிகுந்த அச்சறுத்தல் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்பது குறிப் பிடத்தக்கது.

அதிமுக தலைமையில்தான் கூட்டணி  

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி  பழனிசாமி, “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும், தாம்தான் முதல்வர் வேட்பாளர்; அதில் எந்த மாற்ற மும் இல்லை” என்றும் கூறியுள்ளார்.