விஜயவாடா ஆந்திராவில் நிலநடுக்கம் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் வெள்ளியன்று அதிகாலை 4:05 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. 3.8 ரிக்டர் அளவு பதி வாகிய இந்த நிலநடுக்கம் தர்சி, முத்து ரமூரு, தாளூரு, கங்காவரம், ராமபத்திர புரம், மாண்டமூரூ, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 3 வினாடிகள் மட்டுமே நில நடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் அலறி யடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இப்பொழுது மட்டுமல்ல, பிரகாசம் மாவட்டத்தில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.