tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

திபெத்தில் நிலநடுக்கம்!  லாசா,

மே 12 - திபெத்தில் திங்களன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. ஏற் கெனவே கடந்த ஜனவரி 7 அன்று திபெத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1  ஆக பதிவான அந்த நிலநடுக் கத்தில் நூற்றுக்கணக்கா னோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இரு நாட்களுக்கு முன்பு பாகிஸ் தானிலும், ஞாயிறன்று ஆப்கானிஸ்தானிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.

தங்கம் விலை  ரூ. 1320 குறைந்தது

சென்னை, மே 12 - 22 காரட் ஆபரணத் தங்கத் தின் விலை, திங்களன்று பவு னுக்கு ரூ. 1,320 குறைந்தது. கிராம் ரூ. 8,880-க்கும், பவுன்  71 ஆயிரத்து 040-க்கும் விற்க ப்பட்டது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக மே 8 அன்று ஒரு கிராம் ஆபரணத் தங்க த்தின் விலை ரூ. 9,130-க்கும், ஒரு பவுன்  ரூ.73  ஆயிரத்து  40-க்கும் விற்பனையானது.

 ரயிலை  கவிழ்க்க சதி: சாமியார் கைது!

ராணிப்பேட்டை, மே 12 -  அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய சாமியார் கைது செய் யப்பட்டுள்ளார். மேல் பாக்கத்தில் தண்டவாள இணைப்புகளில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி செய்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேம ராக்களை காவல்துறை அதி காரிகள் ஆய்வு செய்தபோது சாமியார் ஒருவர் சதிச் செய லில் ஈடுபட்டது அம்பலமாகி யுள்ளது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடு பட்ட நிலையில், உத்தர காண்டைச் சேர்ந்த ஹோம் என்ற அந்த சாமியார் திங்க ளன்று கைது செய்யப்பட்டார்.