tamilnadu

img

டாக்டர் ஷியாம் குமார் காரை வழிமறித்து ஆர்எஸ்எஸ் - பாஜக கொலை மிரட்டல்!

டாக்டர் ஷியாம் குமார் காரை வழிமறித்து
ஆர்எஸ்எஸ் - பாஜக கொலை மிரட்டல்!

அருமனை, மார்ச் 31 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில், சமஸ்கிருத அறிஞர் டாக்டர் ஷியாம் குமாரின் காரை வழிமறித்து, ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே முழுக்கோடு புண்ணியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் உருவாக்கப்பட்ட தோழர் ஏ.எஸ். கிருஷ்ணன் குட்டி விளையாட்டு மைதானம்  திறப்பு விழா, கடந்த மார்ச் 29 அன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. விளையாட்டுப் போட்டிக்கான பரி சளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு வட்டாரச் செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார்.

சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் எஸ். நூர்முகமது, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், கருத்துரையாளர் டாக்டர் ஷியாம் குமார் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக, தமுஎகச கலைஞர்கள் நடத்திய ‘காலிச் சாக்கு’ என்ற ஒரு குறு நாடகம் நடைபெற்றது. “முதலாளித்துவ மும் கார்ப்பரேட்டுகளும் சேர்ந்து இந்து - கிறிஸ்தவ - இஸ்லாமிய மக்களுக்கிடையே மோதல்களை உருவாக்கி நாட்டின் வளங்களையும் மக்களின் உழைப்பையும் சுரண்டுகிறார்கள்” என்பது தான், அந்த நாடகத்தின் மையக் கருத்து. சமத்துவத்திற்கு எதிரான சனாதன கொடுமைகள் இதனிடையே, சமஸ்கிருத அறிஞர் டாக்டர் ஷியாம்குமார் பேசும்போது, முழுக்க முழுக்க, அண்ணல் அம்பேத்கர், ஸ்ரீ நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள், சகோதரன் ஐயப்பன், மகாத்மா ஜோதிபா பூலே, ஐயங்காளி, தந்தை பெரியார் ஆகி யோர் பார்ப்பனியம் குறித்து, குறிப்பாக, ‘சனாதன தர்மம்’ என்ற பெயரில் நிலவி வந்த சாதி மேலாதிக்க சமூக அமைப்பை கண்டித்து- பேசியவற்றை சுட்டிக்காட்டி பேசினார். புதிதாக எதையும் அவர் கூறிவிடவில்லை.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘சனாதன தர்மம்’ என்ற பெயரில் நடந்த அநீதிகள்; அவை, உழைக்கும் மக்களுக்கு எவ்வாறு எதிராக இருந்தன என்பதை சமஸ்கிருத நூல்களில் இருந்து மேற்கோள்களை எடுத்துக் கூறினார். அவர் முன்னிறுத்தியது, “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு நல்கி வரும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை நிலைநாட்டுவதற்கு மற்றும் அதை வளர்த்தெடுப்பதற்கு எதிராக இன்றும் சனாதனம் என்கிற பெயரில் பார்ப்பனியம் செய்கின்ற சதிகளை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்” என்பதையே ஆகும். நவீன சமூகத்திற்கு பொருந்தாத பார்ப்பனியம் “’சனாதனம்’ என்கிற பெயரில் பழையன பலதும், அதாவது ஒரு நவீன சிவில் சமூகத்திற்கு பொருந்தாத பார்ப்பனி யத்தின் அநீதிகள் மறுபடியும் வராமல் தடுக்க, அம்பேத்கர் கூறிய ‘மைத்திரி’ அல்லது ஒற்றுமையை மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்துள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தைப் பாதுகாத்திட, நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என பேராசிரியர் ஷியாம் குமார் கூறினார்.

அவர் மேடையில் இருக்கும்போது அவர் வந்த காரின் ஓட்டுநருடன் அப்பகுதியில் உள்ள பாஜக-வைச் சேர்ந்தவர்களும் வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்டவர்களும் கும்பலாக சேர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைக் கார் ஓட்டுநர், விழா அமைப்பாளர் ்களிடமும் ஷியாம் குமாரிடமும் கூறினார். வாகனத்தை மறித்து கொலை முயற்சி இந்நிலையில் ஷியாம் குமாரை வழி அனுப்புவதற்காக விழாக் குழு வினர், புண்ணியம் பகுதியில் வந்த போது, பாஜக - ஆர்எஸ்எஸ்-காரர்கள், கும்பலாக ஆயுதங்களுடன் இருசக்கர வாகனங்களை வைத்து ஷியாம் குமாரின்  வாகனத்தை தடுத்து நிறுத்தி, கொலை வெறித் தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்ட னர். அதனைத் துணிச்சலுடன் முறியடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், டாக்டர் ஷியாம் குமாரை வழியனுப்பி வைத்தனர். பின்பு சாலையில் இருந்த ஆர்எஸ்எஸ் -பாஜக கும்பலின் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். அப்போது பாஜக ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டனர். சம்பவம் அறிந்து வந்த, அருமனை காவல் துறையினர் அங்கு கூடியவர்களை கலைத்தனர். காவல் நிலையத்தில்  புகுந்தும் மிரட்டல் இதனிடையே, விழாவில் பேசுவதற்கு வந்த டாக்டர் ஷியாம் குமார்  வாகனத்தை தடுத்து நிறுத்தி கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட முயன்றதுடன், கொலை மிரட்டலும் விடுத்த பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக கட்சியின் வட்டாரச் செயலாளர் சசிகுமார் மற்றும் கட்சியினர் காவல் நிலையம் சென்று மனு எழுதிக் கொண்டிருக்கும் போது, ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சார்ந்த கும்பல் அருமனை காவல் நிலையத்தில் நுழைந்து வட்டாரச் செயலாளர் மற்றும் கட்சியினரை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை வெளியே அனுப்பி வைத்தும், நீண்டநேரமாக தாக்குதல் நடத்துவதற்காக சாலையிலேயே நின்று கொண்டிருந்தனர். முன்னதாக, பாஜகவினரும் ஒரு புகார் மனுவை காவல் நிலையத்தில் அளித்தனர். தக்கலை துணை சூப்பிரண்டு நல்ல சிவம் மற்றும் ஆய்வாளர் அந்தோணி யம்மா, கடையால் காவல் உதவி ஆய்வாளர் நெல்சன், அருமனை காவல் உதவி ஆய்வாளர் சுஜின் ஆகியோர் வெகு நேரம் பேச்சு நடத்தியதற்குப் பின்னரே கலைந்து சென்றனர். இரவு நேரத்தில் காவல் நிலையத்திலேயே ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் நடத்திய அத்துமீறல், அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.