டபுள் என்ஜின் சர்க்காரு! குழந்தைகள் படும்பாட்டை பாரு!!
மேலேயும் கீழே யும் ஒரே சர்க்கார் இருந்தா மாநிலங்களில் வளர்ச்சி அமோகமாக இருக்கும் என்று பாஜக முன்வைக்கும் “டபுள் என்ஜின்” லாஜிக்கை (17.03.2026)நாளிட்ட தி இந்து நாளிதழின் நடுப்பக்க “டேட்டா பாயிண்ட்” கிழித்து தொங்க விட்டுள்ளது. குஜராத் குழந்தைகளில் 40 சதவீத குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் நோஞ்சானாக, குட்டையாக இருக்கின்ற னர் என்ற தகவலை தனது “டேட்டா பாயிண்ட்” பகுதியில் உறுதி செய்து வெளி யிட்டுள்ளது. குஜராத் சட்டமன்றத்தில் ஜிக்னேஷ் மேவானி எம்எல்ஏ குஜராத் பாஜக அரசின் தோல்வியை வெளுத்து வாங்கி னார்.
28 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் நீங்கள், அதுவும் அறுதிப் பெரும்பான்மையோடு ஆடா மல் அசையாமல் நாற்காலியில் உட் கார்ந்துள்ள நிலையிலும் உங்களால் குஜராத் குழந்தைகளை பாதுகாக்க முடிய வில்லையே என்ற கேள்வியை எழுப்பி னார். அதற்கு பதில் சொன்ன பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மனிஷா வகீல் “நீங்கள் தேசிய குடும்ப உடல்நல ஆய்வு 2019 - 20 ஐ கணக்கில் எடுக்காதீர்கள். உங்கள் அறிவை “அப்டேட்” செய்து கொள்ளுங்கள். ஒன்றிய அரசின் “போஷன் டிராக்கரை” பாருங்கள். ஜனவரி 2026 இல் 11.4 % குழந்தைகள் மட்டுமே சத்துணவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்” என்று பதில் கூறியுள்ளார்.
இதைக் குறித்த உண்மைகளை ஆய்ந்தே தேவ்யான்சி பிஹானி என்ற செய்தியாளர் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். அப்டேட் அமைச்சருக்கே தேவை தேசிய உடல்நல ஆய்வு (NFHS) உடன் போஷன் டிராக்கரை ஒப்பிடவே முடியாது. தேசிய உடல்நல ஆய்வு என்பது ஒட்டு மொத்த மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஆய்வு. போஷன் டிராக்கர் என்பது அங்கன்வாடி மையங்களில் பதியப்பட்டுள்ள குழந்தைகள் பற்றிய புள்ளி விவரங்கள். மேலும் போஷன் டிராக்கர் ஆவணங்கள் அங்கன்வாடியில் பதியப்பட்டுள்ள குழந்தைகளைப் பற்றிய முழுமையான தகவல்களை உள்ளடக்கியதா என்பதும் கேள்வி.
ஆனால் தேசிய குடும்ப உடல்நலஆய்வு என்பது அங்கன்வாடிக்கு செல்லாத குழந்தைகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படுவதாகும். ஆகவே பதில் சொன்ன அமைச் சர்தான் அறிவை “அப்டேட்” செய்து கொள்ள வேண்டியுள்ளது. தேசிய உடல்நல ஆய்வு தகவல்க ளின்படி குஜராத்தில் 39 சதவீத குழந்தை கள் வளர்ச்சி குன்றியவர்கள் (Stunted); 25 சதவீதம் பேர் சத்துணவு குறைபாட்டால் நலிவுற்றவர்கள் (Wasted); 40 சதவீதம் பேர் வயதுக்கேற்ற எடை இல்லாத நோஞ்சான் குழந்தைகள் (Under Weight) ஆவார்கள்.
இந்த மூன்று வழிக ளிலுமே தேசிய சராசரிகளை விட குஜராத் தின் சராசரி அதிகம் என்பதே பேரவலம். நிதி ஆயோக் யார் மூக்குக்கு கீழே இந்தத் தகவல்கள் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டவுடன் சங்பரிவார் கும்பல், இது பாஜகவை அவதூறு செய்யும் பிரச்சாரம் என்று குதிக்கிறார்கள். ஆனால் 2024 நிதி அயோக் வெளியிட்ட “நிலைத்த வளர்ச்சி இலக்குகள்” (Sustainable Development Goals) மீதான அறிக் கையே குஜராத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 40 சதவீதம் எடை குறைந்த நோஞ்சான்களாக (Under Weight) இருக்கின்றனர் என்று கூறி இருக்கிறது. நிதி ஆயோக் பிரதமரின் மூக்குக்கு கீழே இருக்கிற அமைப்புதான்
. போஷன் டிராக்கர் தகவல்களை வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் அதிலும் கூட மோசமாக செயல்படும் மாநி லங்களில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் போன்ற மாநிலங் கள் வந்து விடுகின்றன. குஜராத்தும் கடைசி பெஞ்சிலேயே இருக்கிறது. கடைசி யாக வெளியிடப்பட்டுள்ள போஷன் டிராக்கர் விவரங்களின்படி (ஜூலை 2025) 33 சதவீத அங்கன்வாடி குழந்தைகள் குஜராத்தில் வளர்ச்சி குன்றிய நிலையில் (Stunted) உள்ளனர் என்பதே. இந்த மாநிலங்கள் எல்லாம் டபுள் என்ஜின் சர்க்கார்களைக் கொண்டவை. நன்றாகச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் “சிங்கிள் என்ஜின்” தமிழ்நாடு உள்ளது.
ஒன்னு கோளாறு...இன்னொன்னு ஓடாது... எங்கிட்டு போனாலும் கேட்டை போடுவது போல தி இந்து நாளிதழின் “டேட்டா பாயிண்ட்” குஜராத் அரசை, பாஜகவின் “டபுள் என்ஜின்” லாஜிக்கை உரித்து உப்புக் கண்டம் போட்டு வைத்துள்ளது. 28 வருசமா பாஜக ஆட்சிதான் குஜ ராத்தில். அதுல 16 வருசம் மோடியே முதல்வர். 12 வருசமா டபுள் என்ஜின். மோடியே தில்லி என்ஜினுக்கு டிரைவர். ஆனாலும் குஜராத் குழந்தைகள் படும்பாடு இதுதான். பாஜகவின் டபுள் எஞ்சின்களில் ஒன்று கூட உருப்படியாக இல்லை என்பதுதான் உண்மை. “முள்ளு முனையிலே மூணு குளம்” கதைதான். என்ஜினில் ஒன்னு கோளாறு. இன்னொன்னு ஓடவே இல்லை.
