tamilnadu

img

“கடல்வற்றி மீனுண்ணக் கனவு காணாதே” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

“Do not expect too much from the end of the world “என்று ஒரு சொற்றொடரைத் தலைப்பாகக் கொண்ட ருமே னியத் திரைப்படம் 2023 இல் வெளி வந்துள்ளது. இன்றைய நவதாரா ளமய முறைமையில், முறைப் படுத்தப்பட்டபணி, ஊதியம், வேலைநேரம் எதுவும் இன்றி கிடைத்த வேலையை, கிடைக்கும்  ஊதியம்/கூலிக்கு இரவு-பகலாக உழைக்கின்ற உழைப்பாளர் நிலைமையைப் பேசுகிற படமிது. இவர்கள் உதிரித் தொழிலாளர், தற்காலிகப் பணியாளர், ஒப்பந்த ஊழியர், அற்றைக்கூலிகள் என்று  அழைக்கப்படுகிறார்கள். ஒட்டு மொத்தமாக “கிக் தொழிலாளர்” என்ற ஒற்றைச் சொல்லால் குறிப்பி டப்படுகிறார்கள். உலகளாவிய இப்பிரச்சனை மீது, இதற்கு நேரெதிராக சோசலிச ஆட்சி முறையைக் கொண்டிருந்த  ருமேனிய காலகட்டத்துடன் ஒப்ப வைத்து, இத்திரைப்படம் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறது. “கடல்வற்றி மீனுண்ணக் கனவு  காணாதே” என்று பொருள்படும் இப்படத் தலைப்பின் மூலம் ஒன்று படு; எதிர்த்துப் போராடு என்று நுட்பமாக அறிவுறுத்துகிறது. திருமணமாகாத ஆஞ்சலோ2, (நிகழ்காலத்தவள்) புகாரெஸ்ட் நகரில் உள்ள ஒரு திரைப்பட நிறு வனத்தின் தயாரிப்பு உதவியாள ராகப் பணிபுரிகிறாள். தினசரி 16  மணி நேரத்திற்கும் மேலாக உழைக்கும் இவளும், ஒரு வகை யில் கிக் தொழிலாளியே. தூக்க மற்று, இரவு பகலாக உழைப்ப தால் பல சமயங்களில் காரிலே உண்பதும், உறங்குவதும், இவ ளது வழக்கம். இருபதாயிரத்திற்கும் மேலான பின் தொடர்பவர்களை கொண்ட இவளது இன்ஸ்டாவில், Face Swapping என்ற கணினி தொழில்நுட்ப உதவியோடு முகத்தை மாற்றி, சமூக அவ லங்களை அறச்சீற்றத்தோடு விமர்  சனங்களை அடிக்கடி செய்வாள்.  பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் ஆஸ்திரியா பன்னாட்டு நிறுவனம்,தங்களது பொருட்களின் விளம்பரத்திற் காக, வீடியோ ஒன்றை தயாரிக்க, ஆஞ்சலோ2 பணியாற்றும் நிறு வனத்தோடு ஒப்பந்தம் செய்துள் ளது. இதற்கான முன்தயாரிப்பு வேலைகளில் இவள் மும்முரமாக இயங்குகிறாள். நகரில் பணியின் போது விபத்துக்குள்ளான கிக்  தொழிலாளர்கள் பலரை நேர்காணல் செய்கிறாள்.இதில் ஒருவரை மட்டும் நிறுவனம் தேர்ந்தெடுத்து ஷூட்டிங் நடத்துகிறது.    

விடிகாலை துவங்கி இரவில்  முடியும் இப்படக் கதையோடு, 1981 இல் சோசலிச ஆட்சிக் காலத்தில் வெளிவந்த “Angelo  moves on” என்ற வேறொரு ருமே னிய திரைப்படத்தின் முக்கியப் பகுதிகளை, இச்சினிமாவின் கதை  ஓட்டத்தோடு இணைக் காட்சி களாக்கியிருப்பது இதன் சிறப்பு. 1981 இல் புகாரெஸ்ட் நகரில்,  வாடகைக்கார்  ஓட்டும் பெண்  தான் ஆஞ்சலோ1.(கடந்தகாலத்த வள்)பயணிகளுடனான அனு பவத்தையும், அதில் அவளுக்கு ஏற்பட்ட காதலையும் பேசு கிறது இப்படம். பணிச்சுமை நெருக்கடியில் வாழும் ஆஞ்ச லோ2-ன் வாழ்வு மற்றும்  ஆஞ்சலோ1ன் வாழ்வையும்  அடுத்தடுத்து காண்பித்து, இரு வேறு காலக் கட்டத்திற்கான சமூகப் பொருளாதார வித்தியா சங்களை பின் நவீனத்துவப் பாணி யில், இயக்குநர் நளினமாக உணர்த்துகிறார்.        பணியிடப் பாதுகாப்பு வீடியோவை வெளியிட வரும்  பன்னாட்டு நிறுவன அதிகாரி, ஜெர்மன் எழுத்தாளர் கோத்தே வின்(Goethe) கொள்ளுப் பேத்தி.  இவர் தனது பாட்டனின் உலகப் புகழ்பெற்ற சுயசரிதை நூலான “Poetry and Truth”-ஐ, இதுவரை  படித்ததில்லை என ஆஞ்சலோ2-இடம் பகிர்வது நகை முரண். இணைச் சினிமாவில் காரோட்டியாக நடித்த முன்னாள் நடிகை ஆஞ்சலோ1-இன் மகன் ஓவிடியூ. இவர் கார் விபத்தில் சிக்கி இடுப்பொடிந்து,ஒன்றரை வருட கோமாவிலிருந்து மீண்ட வர்.சக்கர நாற்காலி உதவி யோடு வாழும் இவரே, விளம்பரப்  படத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வர். இவர் படப்பிடிப்பின் போது,  சாலையின் குறுக்கே போக்கு வரத்து வசதிக்காக வைக்கப்பட்ட தடைக்கம்பம் வண்ணம் பூசி வித்தியாசப்படுத்தாததே, விபத்திற்கான காரணமெனக் கூறு கிறார். ஆனால் பட இயக்குநரோ தலையில் ஹெல்மெட் அணி யாததே காரணமென்று கூறச் சொல்கிறார். இவரோ மறுக்கிறார்.இயக்குநரின் நெருக்கடி அதி கரிக்க,”ஹெல்மெட் அணிந்தி ருந்தால் விபத்திலிருந்து தப்பித்தி ருக்கலாம். எனவே ஹெல்மெட் அணிந்து பணிபுரியுங்கள்” என விருப்பமின்றிக் கூறுகிறார். இந்த படப்பிடிப்பு நடக்கை யில், ஓவிடியூ மற்றும் அவனது  வயதான தாய் ஆஞ்சலோ1 உள்ளிட்ட குடும்பத்தினர் கேமரா முன் நிற்கையில் தூறல் விழுகிறது. குடும்பமே நனைகிறது.நிறுவன  விருப்பத்தின்படி  வசனம் பேசாதிருக்கையில் படக்  குழுவினர் குடை பிடிக்காமலி ருப்பர்.இயக்குநர் விருப்பப்படி ஓவிடியூ வசனம் பேசியபின் குடும்  பத்தினருக்கு குடை பிடிக்கப் படும்.

இது கண்ணுக்குத் தெரியாத பன்னாட்டு நிறுவனங்கள் தங்க ளின் நிகழ்ச்சி நிரலை எப்படி  மறைந்திருந்து, மிரட்டாமல் கச்சி தமாக நிறைவேற்றிக் கொள்கி றார்கள் என்பதனை விவரிக்கிற, பெரும்பனிப்பாறையின் சிறு முனையான படிமக்காட்சி. நவீன ஆஞ்சலோ2-இன் பாட்டி புதைக்கப்பட்ட கல்லறையின் ஒரு பகுதியை தனியார் ஆக்கிர மிப்புச் செய்திருப்பர்.கல்லறை யை பராமரிக்கும் நிறுவனம், ஆக்கிரமிப்பு பகுதியை மீட்பதற்கு பதில், அழுகிப் போன  பிணப்புழுக்களை புதிய சவப்பெட்டியில்,வேறிடத்தில், தலைமை பங்குத் தந்தையின் பிரார்த்தனையோடு புதைப்ப தாகக் கூறுமிடம் வாழ்வின்  அபத்தங்களை அம்பலப்படுத்து மிடம். ருமேனியா நாட்டவரான ராடு ஜூடு, இப்படத்தை திரைக்கதை எழுதி,தயாரித்து,சிறப்பாக இயக்கியும் உள்ளார். 2023  இல் வாழும் ஆஞ்சலோ2-ஆக  இலின்கா மினோலோச், கோபத்தோடு இன்ஸ்டாவில் வக்கிரச் சொல்லாடல்களைப் பகிர்வது, விதி மீறும் காரோட்டி களை சைகைகளால் திட்டுவது  போன்ற பலவற்றில் மிகைப்படுத் தாத துல்லியமான நடிப்பைத் தந்துள்ளார். இடையிடையே வரும் Angelo moves on படத்தின் நாயகியான ஆஞ்சலோ1, சாந்தமான முகத்தால் ஈர்த்துள்ளார். அவசரக்கதியில் ஓடும் இன்றைய சந்ததியின் இருண்ட மனநிலையை பிரதிபலிக்கும், ஆஞ்சலோ2-இன் காட்சிகளை, கறுப்பு வெள்ளையில் வேறு படுத்தி காண்பித்துள்ளார் சினிமாட்டோ இராபர் மாரியஸ் பாண்ட்ரூ. இரு வேறு புனைவு களின் களங்களை, குழப்பமின்றி படத்தொகுப்புச் செய்துள்ளார் ஹேடலின் கிறிஸ்டு. இப்படம் 2023 இல், லோகர்னோ உலகத் திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை வென்றுள்ளது. இதேகாலத்தில் டொரண்டோ மற்றும் சாவ் பாப்லோ உலகத் திரைப்பட விழாக் களில் அதிகாரப்பூர்வ திரையிடல் பிரிவிலும் கலந்துள்ளது. 1981 க்கும், 2023க்குமிடையில் புகாரெஸ்ட் நகரச் சாலைப் போக்குவரத்து விதிகளை உதாசீனப்படுத்தும் போக்கு, பெண்களின் நிலை போன்ற வற்றில் பெரிய மாற்றமில்லை என்பதையே இப்படம் சீரிய முறையில் சொல்கிறது. இருப்பி னும் முன்னதில் ஆஞ்சலா1, சாத்வீகமாக தனது பிரச்சனை களை அணுகுகிறாள். வரையறுக்  கப்பட்ட வேலை நேரம். பாது காக்கப்பட்ட வேலை. பின்னதில்  ஆஞ்சலோ2, தனது உள்ளக்  குமுறல்களை இணையப்பதிவு கள் மூலம் ஆக்ரோஷமாக வெளிப்  படுத்துகிறாள். பாதுகாப்பற்ற கிக்  வேலை முறை. வரையறுக்கப் படாத வேலை நேரம். கம்யூனிஸ ஆட்சிக் காலத்தை விட,‌நவீன தாராளயுகத்தில் ருமே னிய வாழ்வியலில் சிக்கல் அதி கரித்துள்ளது என்பதே இப்படச் செய்தி. முபியில் உள்ளது.