திருநள்ளாறு கோயிலில் பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்த மாவட்ட எஸ்எஸ்பி ஆய்வு
காரைக்கால் மாவட்டம் திரு நள்ளாறில் உள்ள சனி பகவா னுக்கு தனி சந்நிதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்க கணிப்பின்படி நடத்தப்படுகிறது. அதன்படி 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இக்கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதேநேரம், திருக்கணித பஞ்சாங்க கணிப்பின்படி மார்ச் 29 அன்று இரவு சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. எனவே, அன்றைய நாளில்தான் திருநள்ளாறு கோயிலி லும் சனிப்பெயர்ச்சி விழா நடை பெறும் என்று கருதியிருப்போரும், திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றுவோரும் சனீஸ்வர பக வானை தரிசிக்க திருநள்ளாறு வரக்கூடு. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், காவல்துறை சார்பில் முன்னேற்பாடுகள் மேற் கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், மாவட்ட முது நிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, மண்டல காவல் கண்காணிப்பாளர் ஏ.சுப்பிரமணி யன், காவல் ஆய்வாளர் லெனின் பாரதி உள்ளிட்டோருடன் சனிக் கிழமை திருநள்ளாறு நளன்தீர்த்த குளம் பகுதி, வரிசை வளாகம், பிரதான சாலை உள்ளிட்ட பகுதி களை பார்வையிட்டார். இதுகுறித்து போலீசார் கூறு கையில், திருநள்ளாறு கோயி லில் சனிப்பெயர்ச்சி விழா அடுத்த ஆண்டுதான் என்றாலும், திருக்கணி பஞ்சாங்க முறையி லான சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நிகழ்வதாலும், அன்று சனிக்கிழமை என்பதாலும் பக்தர்கள் வருகை அதிகளவில் இருப்ப தற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் பக்தர்கள் கோயிலில் சுவாமியை விரைவாக தரிசனம் செய்து செல்லும் வகையிலும், கோயி லுக்குள் ஏற்படுத்தப்பட வேண்டிய தடுப்பு முறைகள், நளன் தீர்த்த குளம் பகுதியில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் எஸ்எஸ்பி ஆய்வு செய்தார் என தெரிவித்தனர்