மதுரை, மே 22- இராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கினால் பிழைக்க வழி இல்லாமலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். அவர்களை இராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகமும் தெற்கு ரயில்வேயும் இணைந்து இராமநாதபுரம் மற்றும் மதுரை ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலத்தில் உள்ள சுபால் என்ற இடத்திற்கு வியாழனன்று அனுப்பி வைத்தனர். இந்த சிறப்பு ரயில் மதுரை, அரா, ப்ருனி மற்றும் ககாரிய ஆகிய ரயில் நிலை யங்களில் நின்று செல்லும். வியாழனன்று மதியம் 01.00 மணிக்கு இராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது, மாலை 03.45 மணிக்கு மதுரை ரயில் நிலை யத்திலிருந்து புறப்பட்டது. சனிக்கிழமை அன்று மாலை 05.15 சுபால் ரயில் நிலையம் சென்று சேருகிறது. இந்த ரயிலில் இராமநாதபுரத்தில் 456 , மதுரையில் 1144 புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள், மற்றும் மாணவர்கள் பயணிக்கி றார்கள். ரயிலில் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. சிறப்பு ரயிலில் பயணித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய் மற்றும் ரயில்வே அதிகாரிகள் லலித் மனசுகானி, கூடுதல் கோட்டமேலாளர், வி. பிரசன்னா, மூத்த கோட்ட வணிக மேலாளர், ம. பரத், கோட்ட வணிக மேலாளர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.