tamilnadu

ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களுக்கு தேனியிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பப்பட்டனர்

தேனி, மே 25- தேனி மாவட்டப் பகுதிகளிலி ருந்து ஜார்கண்ட் ,ஒரிசா மாநி லத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வ தற்காக திங்களன்று திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் வெளி மாநிலங்க ளைச் சேர்ந்த 4,125 தொழிலாளர்கள் கடைகள், உணவகம், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இவர் கள் தற்போது மாவட்ட நிர்வாகம் மூலம் தேனி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் ஆகிய இடங்க ளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், கடந்த மே 18-ம் தேதி மகாராஷ்டி ரத்தைச் சேர்ந்த 180 தொழிலா ளர்கள், மே 20-ம் தேதி பீகார் மாநி லத்தைச் சேர்ந்த 256 தொழிலா ளர்கள், மே 22 -ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 24 தொழி லாளர்கள் உள்பட மொத்தம் 460 பேர் மாவட்ட நிர்வாகம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். மே 23 ஆம் தேதி மகா ராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 688 தொழிலாளர்கள் சொந்த ஊர் களுக்குஅனுப்பி வைக்கப்பட்ட னர். தற்போது திங்களன்று புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 174 பேர் 5 பேருந்துகள் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கும் 108 பேர்கள் 3 பேருந்துகள் மூலம் ஒடிசா மாநி லத்திற்கும் செல்ல திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.