சேலம், மே 25- சேலம் ரயில் சந்திப்பு நிலை யத்தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 1,438 புலம் பெயர்ந்த தொழி லாளர்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு, மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் திங்களன்று ரயில் மூலம் வழி அனுப்பி வைத்தார். இது குறித்து மாவட்ட ஆட் சியர் சி.அ.ராமன் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்ப டையில் சம்பந்தப்பட்ட மாநில அர சின் அனுமதியுடன் அந்தந்த மாநி லங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கி ணைப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. எனவே வெளி மாநிலத் தொழி லாளர்கள் தன்னிச்சையாக நடை பயணமாகவோ, பிற வாகனங்க ளின் மூலமாகவோ செல்ல வேண் டாம். வெளி மாநிலத் தொழிலாளர் கள் தற்போது தங்கியிருக்கும் முகாம் ம்களிலேயே தொடர்ந்து இருக்க வும். சேலம் மாவட்டத்தில் பணி புரிந்து வந்த பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டதோடு உணவு, தங்கு மிடம் உள்ளிட்ட அனைத்து அடிப் படை வசதிகளும் அனைவருக்கும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. மேலும், இத்தொழிலாளர்கள் தங் கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்பம் தெரிவித்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்வ தற்காக துணை ஆட்சியர்கள் நிலையிலான குழுக்கள் அமைக்கப் பட்டு, அந்தந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்பியவர்களின் பட்டி யல் தயாரிக்கப்பட்டது.
இதனையடுத்து அனைவருக் கும் மருத்துவத் துறையின் மூலம் உரிய பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு, மருத்துவ சான்றி தழ்களும் அளிக்கப்பட்டு முதற்கட் டமாக இன்றைய தினம் ஒடிசா மாநிலத்திற்கு 773 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சேலம் மாவட்ட நிர் வாகத்தின் மூலம் சேலம் மாவட் டத்தின் அருகில் உள்ள மாவட்டங்க ளான கள்ளக்குறிச்சி, திருப்பூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற் றும் வேலூர் ஆகிய மாவட்டங் களில் பணிபுரிந்த ஒடிசா மாநி லத்தை சேர்ந்த 665 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என மொத்தம் 1438 புலம் பெயர்ந்த தொ ழிலாளர்கள் ரயில் மூலம் சேலம் ரயில் சந்திப்பு நிலையத்திலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு பேருந்து வசதி, தேவையான உணவு, குடிநீர் உள் ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங் கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.