tamilnadu

img

உத்தரகண்ட்டின் தரலியில் பேரழிவு; 50 பேர் பலி

உத்தரகண்ட்டின் தரலியில் பேரழிவு;  50 பேர் பலி

மேக வெடிப்பால்  திடீர் வெள்ளம்

டேராடூன், ஆக. 5 - உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தரலி பகுதியில், மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அந்தப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.  வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வெள்ளத்துடன் மணலும் சேர்ந்து வந்ததால், தரலிப் பகுதியின் பாதி, இருந்த தடமே தெரியாமல் அழிந்துள்ளது.  இதுதொடர்பான வீடியோ  காட்சிகள் வெளியாகி யுள்ளன.  அவற்றில், மலை அடி வாரத்தில் உள்ள கட்ட டங்கள் அனைத்தும் வெள் ளத்தில் அடித்துச் செல்லப் படுவதும், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வருவதை பார்த்த மேடான பகுதியில் இருந்த மக்கள், அடிவாரத்தில் இருந்த மக்களை எச்சரிக்க முயல்வதும், ஆனால், காட்டாற்று வெள்ளத்தின் பெரும் இரைச்சல், அந்த எச்சரிக்கை குரல்களை கேட்க விடாதபடி செய்வதும், பதைபதைப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.  தற்போது, இந்திய ராணுவம், மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகம் ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.  25-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதால், குறைந்தது, 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை, 4 பேர் உயிரிழந்திருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) அதன் 12-ஆவது பட்டாலியனில் இருந்து 16 பேர் கொண்ட குழுவையும் அனுப்பியுள்ளது. 3 அதிகாரிகள் மற்றும் பிற அணிகளைக் கொண்ட குழுக்களும் தரலியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.