states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பவன் கேரா

தினமும் காலை அமெரிக்க ஜனாதிபதி தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக இந்தியாவை மிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்திய பிரதமரோ தூங்கிக் கொண்டே இருக்கிறார்.

திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் 

சீனாவைப் பற்றி பேசக்கூடாது என்கிறார் உச்சநீதிமன்ற நீதிபதி. ‘பாலஸ்தீனத்தை பற்றி பேசாதீர்கள். சாலை, சாக்கடை பிரச்சினைகளை பேசுங்கள்’ என்கிறார் மும்பை நீதிபதி. தர்மஸ்தாலா கொலைகள் பற்றி பேசக் கூடாது என்கிறார் பெங்களூரு நீதிபதி. இவையெல்லாம் யதேச்சையான சம்பவங்களா அல்லது நீதித்துறையின் புதிய இயல்பா, கனம் நீதிபதி அவர்களே! 

பத்திரிக்கையாளர் ஜான் ஒலிவர் 

‘காசா பட்டினியில் வாடுகிறது’ என்கிற வாக்கியம் உண்மையாக தெரிந்தாலும் முழு உண்மை அதில் இல்லை. ‘இஸ்ரேலால் காசா பட்டினி போடப்படுகிறது’ என்பதுதான் உண்மை நிறைந்த வாக்கியம்.

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் தாமஸ் ஐசக்

டிரம்ப் விதிக்கும் வரி அச்சுறுத்தல்கள் நமது தேசிய இறையாண்மைக்கு ஒரு சவாலாகும். மிரட்டல்களுக்கு இந்தியா அடிபணியக்கூடாது, மேலும் வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பிரிக்ஸ் நாடுகளிடையே விவாதத்தைத் தொடங்க வேண்டும்.