ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணு குண்டு வீசிய 80 ஆம் ஆண்டு நினைவு தினம்
அமைதி மற்றும் அணு ஆயுதக்குறைப்புக்கு அழைப்பு
ஹிரோஷிமா, ஆக.6- ஹிரோசிமாவில் அமெரிக்கா அணு குண்டு வீசியதில் படுகொலையான மக்களின் 80 ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இத்தினத்தில் அமைதி மற்றும் அணு ஆயுதக் குறைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது 1945 ஆகஸ்ட் 6 அன்று “லிட்டில் பாய்” (Little Boy) என்ற பெயர் சூட்டப்பட்ட அணு குண்டை அமெ ரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசியது. இத்தாக்குதலின் 80 ஆவது ஆண்டு நிறை வையொட்டி ஹிரோஷிமாவின் அமைதி நினை வுப் பூங்காவில் (Peace Memorial Park), குண்டு வெடித்த இடத்தின் அருகே நடந்த வருடாந்திர அஞ்சலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில், அணு குண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்கள், அதிகாரிகள் மற்றும் 120 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். உலக நாடுகளின் பிரதிநிதி களின் இந்த எண்ணிக்கையானது இது இது வரை இல்லாத அளவுக்கு அதிகம் என தெரி விக்கப்பட்டது. மேலும் இவர்கள் உலகளவில் அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். உலகில் முதல் முறையாக அணு குண்டு வீசி அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த நாடு அமெரிக்கா மட்டுமே. தற்போது வரை வேறு எந்த நாடும் அணுகுண்டை பயன்படுத்தி யது இல்லை. இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா ஒரு ராணுவ தளம் என கூறி அமெரிக்கா தான் கண்டு பிடித்த அணு குண்டை சோதனை செய்யும் இடமாக ஜப்பா னின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நக ரங்களிலும் குண்டு வீசியது. முதல் தாக்குதலில் ஹிரோஷிமா நகரம் முழுமையாக தரைமட்டமானது. குண்டு வீசப்பட்ட அன்று கிட்டத்தட்ட 78,000 க்கும் மேற் பட்டோர் உடனடியாக உயிரிழந்தனர். தீக்கா யங்கள் மற்றும் அணுக் கதிர்வீச்சு காரணமாக அந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஹிரோஷிமாவின் அமைதி நினைவுப் பூங்கா வில் (Peace Memorial Park), குண்டு வெடித்த இடத்தின் அருகே நடந்த வருடாந்திர அஞ்சலி நிகழ்ச்சியில், உலக நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர். ஹிரோஷிமா நகர மேயர் கசுமி மாட்சுய், உலகளவில் அதிகரித்து வரும் போர் மற்றும் போர்ச் சூழல் அபாயங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தார். மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் அவசியம் என்று பேசி வரு கின்ற உலக நாடுகளின் தலைவர்களுக்கு அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார். மேலும் உலக நாடுகளின் தலைவர்கள் தயவு செய்து ஹிரோஷிமாவுக்கு வந்து, அணு குண்டு தாக்குதலால் ஏற்பட்டுள்ள மிக மோசமான பாதிப்பை நேரில் பார்க்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.