states

img

இனி பதிவுத் தபால் சேவை இல்லை

இனி பதிவுத்  தபால் சேவை இல்லை    ஸ்பீடு போஸ்ட் மட்டுமே! அஞ்சல் துறை அறிவிப்பு

தபால் துறையில் பதிவுத்தபால் களை ரத்து செய்து விட்டு அதனை ஸ்பீட் போஸ்ட் உடன் இணைத்துள்ள தாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.   இந்திய தபால் துறையின் செயல்பாடு களை நவீனமயமாக்குவது என்ற பெய ரில் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப் படுகிறது. இதன்படி செப்டம்பர் 1 முதல் பதிவு தபால் சேவை நிறுத்தப்படுவ தாகவும் அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மொத்த பயனர்களும் செப்டம்பர் இறுதிக்குள் ஸ்பீட் போஸ்டுக்கு மாற வேண்டும் என்று  அஞ்சல் துறை செயலாளர் மற்றும் இயக்குநர் ஜெனரல் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.   ஸ்பீடு போஸ்ட் உடன் ஒப்பிடுகையில் பதிவு தபால் அனுப்புவதற்கு குறைந்த செலவே ஆகும். இது கிராமப்புறம் உள்ளிட்டு பல பகுதிகளில் மக்களுக்கு சிக்கனமானத் தேர்வாக இருந்தது.  ஸ்பீட் போஸ்ட் கட்டணங்கள் 50 கிராம் வரை பார்சல்களுக்கு 41 ரூபாயில் இருந்து  தொடங்குகின்றன. இது பதிவுத் தபாலை விட தோராயமாக 20-25 சதவீதம் அதிக விலை கொண்டது என கூறப்படுகிறது.  இதனடிப்படையில் தற்போதைய இம்முடிவானது சிறு வணிகர்கள், விவசா யிகள் உள்ளிட்ட அஞ்சல் சேவைக ளையே பெருமளவு நம்பியிருக்கும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பெரிதும் பாதிக்கும்.