புதிய கெடுபிடியை திரும்பப்பெற்றது டிஜிசிஏ புதிய விதிகளால் (
விடுப்பு - வார விடுமுறை, ஓய்வு நேரம்) இண்டிகோ நிறுவன விமானிகள், பணி யாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இண்டிகோ விமான சேவை கடுமையாக ஒரு வார காலமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப் பாக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 3 நாட்களில் மிக மோசமான அளவில் 500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் முடங்கின. இத னால் நாட்டின் பல விமான நிலையங் களில் பயணிகளின் கூட்டம் கடுமையாக அதிகரித்து நெரிசலில் சிக்கித் தவிக் கிறது. விமான பயணிகள் பலரும் தங்க ளது துயர அனுபவத்தை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு, கண்ட னத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே போதிய பணியாளர் கள் இல்லையெனில், விமானத்தை இயக்க இண்டிகோவை அனுமதிக்க வேண்டாம் என விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) விமானி கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. மறு புறம், டிசம்பர் 8ஆம் தேதி முதல் விமா னங்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இண்டிகோ நிறு வனத்தின் நெருக்கடியான நிலை வெள்ளி யன்று 4ஆவது நாளாக நீடித்தது. தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வெள்ளியன்று ஒரே நாளில் உச்சபட்சமாக 400க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிக்கப் பட்டுள்ளது. நெருக்கடி நிலைமை தீவிரமடைந்ததால், விமான நிறுவனங் களின் பணியாளர்களுக்கு,”வாராந்திர ஓய்வுக்கு மாற்றாக எந்த விடுப்பும் இரு க்கக் கூடாது” என்று ஜனவரி 20ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை டிஜிசிஏ வெள்ளிக் கிழமை திரும்பப் பெற்றது. புதிய விதிகள் தளர்த்தப்பட்டதை அடுத்து இண்டிகோ விமான போக்குவரத்து சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.