tamilnadu

துணைநிலை ஆளுநர் மூலம் ஆம் ஆத்மியை மிரட்டும் பாஜக

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான சஞ்சய் சிங் இரண்டு நாட்களு க்கு முன்,”வெற்றி பெற வாய்ப்புள்ள ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சிலரை பாஜக வினர் தொலைபேசியில் அழைத்து, தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்ன தாகவே கட்சி மாறினால் ரூ. 15 கோடி அளிப்பதாக பேரம் பேசி வருகின்றனர்” என குற்றம் சாட்டினார்

இந்நிலையில், சஞ்சய் சிங் எழுப்பிய இந்த குற்றச்சாட்டை விசாரிக்க தில்லி தலைமைச் செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட் டுள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமை அன்று தில்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு அம்மாநில ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவ லர்கள் வருகை தந்தனர். ஆனால், அவர்க ளிடம் விசாரணை நடத்துவதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் உள்ளே அனுப்ப ஆம் ஆத்மி வழக்கறிஞர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.