தியாகி என்.வெங்கடாசலம் இல்லத் திருமண விழா துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
தஞ்சாவூர், பிப்.6-
தஞ்சாவூரில் தியாகி என்.வி இல்லத் திருமண விழாவை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் இராயமுண்டான்பட்டி, நினைவில் வாழும் தியாகி என்.வெங்கடாசலம் - வெ.லீலாவதி ஆகியோரின் மகன் வழிப் பேரனும், பேராசியர் முனைவர் வெ.சுகுமாரன் - நினைவில் வாழும் இந்திரா ஆகியோரது மகனுமான மருத்துவர் வி.எஸ். வெங்கடேஷ், தஞ்சை வழக்குரைஞர் ச.சு. ராஜகுமாரன் - ரா. சர்மிளா ஆகியோரது மகளுமான ஆர். ஐஸ்வர்யா ஆகியோரது திருமணம் தஞ்சாவூர் மகாராஜா மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே. ரெங்கராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், கருமலையான், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஎம் மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், ஆர்.சி.பழனிவேலு, கோ.நீலமேகம், சிபிஎம் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மூத்த அரசியல் தலைவர் பழ.நெடுமாறன், தமிழக அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி.செழியன், சிவ.வீ.மெய்யநாதன், எம்.பி ச.முரசொலி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், க.அன்பழகன், டி.கே.ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, நா.அசோக்குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வழக்குரைஞர் வெ.ஜீவகுமார், பேராசிரியர் வெ.சுகுமாரன், என்.வி. கண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் செய்திருந்தனர்.
