மன்னார்குடி நகரக்குழு சார்பில், ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன் தலைமை வகித்தார். மன்னார்குடி தேரடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தலைவர்கள் ஜி. ரகுபதி, டி. ஜெகதீசன், தமுஎகச செயலாளர் கே. அகோரம், நகரக்குழு உறுப்பினர் கே. பிச்சைக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு கண்டன உரையாற்றினார்.
