பிளஸ்-1 பள்ளி மாணவர்கள் 5.34 லட்சம் பேருக்கு ரூ.241 கோடியில் இலவச மிதிவண்டிகள் காரைக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
சிவகங்கை,நவ.14- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி யில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 2025- 2026 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 5,34,017 மாணவ, மாணவியருக்கு 241 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டி கள் வழங்கும் திட்ட துவக்கவிழா நவம்பர் 14 வெள்ளியன்று நடை பெற்றது.
இதனை தொடங்கி வைக்கும் அடையாளமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 1,448 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குதல், குழந்தைகள் தினம் ஆகிய விழாவும் நடைபெற்றது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி வரவேற்றார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 5.35 கோடி சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இதில் 57,000 மாணவிகள், மாண வர்களை விட கூடுதலாக பெறு கின்றனர். இதற்கு அதிக மாணவிகள் பள்ளியில் சேர்ந்து படிப்பது தான் காரணம். இது தான் திமுக அரசின் வெற்றி. இந்தியாவிலேயே அதிக திட்டங்களை கல்வித்துறையில் தமிழக முதல்வர் செயல்படுத்தி வரு கிறார். மாணவர்கள் சிந்தனை ஆற்ற லை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெரியவர்களை விட அதிகம் சிந்திக்கக் கூடியவர்கள் குழந்தைகள் தான். சொல்லப்போனால், பெற்றோ ருக்கே குழந்தைகள் தான் ஆசிரி யர்கள்.விரைவில் கல்லூரிகளில் இலவச லேப்டாப் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டம் யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் ரீல்ஸ் பார்க்கிறோம். ரீல்ஸ் வாழ்க்கை கிடையாது. அதில் வருவது எல்லாம் முக்கால்வாசி பொய் தான். ரியலாக கல்விதான் கை கொடுக்கும். கல்வியோடு சேர்ந்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கல்வியில் முன்னேறினால் குடும்ப பொருளா தாரம் முன்னேறும். அது மூலம் தமிழகமும் முன்னேறும். ஆசிரியர்கள் உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்கி மற்ற பாடங்களை நடத்த வேண்டாம்.
மாணவர்களுக்கு படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார், எஸ்.மாங்குடி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செய லாளர் மருத்துவர் பி.சந்தர மோகன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர் -சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் எ.சரவண வேல்ராஜ், காரைக்குடி மாநகராட்சி மேயர் சே. முத்துதுரை, துணை மேயர் ந. குணசேகரன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
