கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி மறுப்பதா? மோடி அரசின் துரோகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்
கோயம்புத்தூர், நவ. 20 – கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் அறிக்கையைத் திருப்பி அனுப்பிய நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, கோவையில் வியாழனன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்போதும் இடையூறாக இருக்கும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது, கோவை, மதுரை மக்களின் நீண்ட நாள் கனவாக இருக்கிற மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கா மல் திருப்பி அனுப்பியுள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசின் வஞ்சகத்திற்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகம் மற்றும் துரோகத்திற்கு எதிராக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கோவை மற்றும் மதுரை நகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்ட ங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு, வியாழனன்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தபெதிக உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை மண்டல திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச் செல்வன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டா முத்தூர் ரவி, தெற்கு மாவட்டச் செய லாளர் தளபதி முருகேசன், கோவை எம்.பி. கணபதி ப. ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், காங்கிரஸ் சார்பில் எம்.என். கந்த சாமி, விஎம்சி மனோகரன், மதிமுக சார்பில் ஆர்ஆர் மோகன்குமார், சிபிஐ சார்பில் ஆறுமுகம், சி. சிவசாமி, தபெதிக சார்பில் கு. இராம கிருட்டிணன், விசிக சார்பில் குமணன் மற்றும் கொமதேக, ஆதித் தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி உள்ளிட்ட இயக்கங்களின் தலை வர்கள் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை யேற்று, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், 15 மாதங்களுக்கு முன்பே திட்ட அறிக்கை அனுப்பியும் நிராகரித்துள் ளனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஐந்தே நாளில் அனுமதி தருகிறார்கள். தமிழ்நாட்டை வளர விடக்கூடாது என்ற குறுகிய மனநிலையே இதற்குக் காரணம். சென்னை மெட்ரோவிற்கு ஒன்றிய அரசு நிதி தராதபோதும் தமிழக அரசே நிதி ஒதுக்கி நிறைவேற்றியவர் முதல்வர் ஸ்டாலின். மெட்ரோ போலவே, எய்ம்ஸ் உள்ளிட்ட பல திட்டங்களைத் தாமதப்படுத்தி வஞ்சிக்கிறார்கள். கோவையில் பெரியார் நூலகம், அவிநாசி மேம்பாலம், ஐடி பூங்கா, செம்மொழிப் பூங்கா என ஏராளமான திட்டங்களை வழங்கியவர் முதல்வர். ஒன்றிய அரசும் அதற்கு துணை போகும் அதிமுகவையும் வரும் தேர்தலில் தோற்கடித்து கோவையில் 10 தொகுதிகளையும் வென்றெடுப்போம்” என்றார்.
