மதுரை:
மைக்ரோபைனான்ஸ் நுண்நிதி நிறுவனங்கள் கடனை 2021- மார்ச் வரை காலநீட்டிப்பு செய்யவேண்டும். வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். அங்கன்வாடி, சத்துணவு மையங்களிலுள்ள உணவு பொருட்களை அனைத்து வீடுகளுக்கும் ஊரடங்குகாலத்தில் நேரடியாக சென்று வழங்க வேண்டும். ஊரக வேலையை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுரையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா, கே.ராஜேஸ்வரி, பொருளாளர் ஆர்.லதா, துணைத்தலைவர் ஜே. ஜெயராணி, ப்ரீதி, பாத்திமா, ஜென்னி,பானுமதி, சுப்புலட்சுமி, தமிழரசி, பசும்பொன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.