tamilnadu

img

சிபி(ஐ)எம் இடுக்கி மாவட்டச் செயலாளராக சி.வி.வர்கீஸ் மீண்டும் தேர்வு

தொடுபுழா, பிப். 7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  இடுக்கி மாவட்ட மாநாடு தொடுபுழா வில் நடைபெற்றது. மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது டன், புதிய மாவட்டக்குழு உறுப்பி னர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மாவட்டச் செயலாளராக சி.வி. வர்கீஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார். விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; - தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்; மலைப்பகுதிகளில் வனவிலங்குகளின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;  குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும்; சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சலுகை விலையில் உரம் வழங்க வேண்டும்; மலையக பகுதி களில் மருத்துவ வசதிகளை மேம் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இடுக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக சி.வி. வர்கீசுடன் பி.எஸ்.ராஜன், கே.வி. சஷி,  கே.எஸ். மோகனன்,  வி.என்மோகனன், வி.வி.மத்தாய்,  ஆர்.திலகன், ரோமியோ செபாஸ்டியன் மற்றும் ஷைலஜா சுரேந்திரன், சுமா சுரேந்திரன், திலோத் தமா சோமன், லிசி ஜோஸ் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மாவட்டக்குழு உறுப்பினர்களாக எம்.ஜே. மேத்யூ, பி.என். விஜயன், என்.வி. பேபி, வி.ஏ. குஞ்சுமோன், ஜி. விஜயானந்த், கே.எல். ஜோசப், கே.டி. பினு, எம். லட்சுமணன், டி.கே.  ஷாஜி, ஆர். ஈஸ்வரன், முகமது பைசல், வி.ஆர். சஜி, என்.பி. சுனில்குமார், எம்.ஜே. வாவச்சன், டி.எஸ்.பி.சி., எம்.என். ஹரிக்குட்டன், கே.கே.விஜயன், பி.பி. சபீஷ், ரமேஷ் கிருஷ்ணன், டி.எம். ஜான், வி. சிகிமோன், பி.பி. சுமேஷ், வி.வி. ஷாஜி, டி.கே. சிவண்ணையர், டி.ஆர். சோமன், கே.ஜி.சத்யன், எம்.தங்கதுரை உள்ளிட்டோர் தேர்ந்தெடு க்கப்பட்டு உள்ளனர்.  மாநில செயலாளர் எம்.வி.கோவிந் தன் மாஸ்டர் சிறப்புரை யாற்றினார். இடுக்கி மாவட்டத்தின் வளர்ச்சி க்கும் மக்களின் நலனுக்கும் புதிய மாவட்டக் குழு தீவிரமாக செயல்படும் என மாவட்டச் செயலாளர் சி.வி. வர்கீஸ் தெரிவித்துள்ளார்.