tamilnadu

img

டிட்வா புயல் பாதிப்பு இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவால்

டிட்வா புயல் பாதிப்பு இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவால்

கொழும்பு, டிச.10- டிட்வா புயலின் பாதிப்பானது இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக மாறி யுள்ளது.  சமீபத்தில் தாக்கிய டிட்வா புயலா னது இலங்கை வரலாற்றில் “மிகப் பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கைச் சீற்றம்” என்று அந்நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த புயலின் காரணமாக 2,75,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட  20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 638 பேர் இறந்துள்ளனர். 192 பேர் காணா மல் போயுள்ளனர்.ஆரம்பக் கட்ட கணக் கீட்டின்படி, சுமார் 7 பில்லியன் டாலர்கள் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 7 சதவிகி தமாகும். இது அந்நாட்டின் சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறைக்கான மொத்த அரசாங்க பட்ஜெட்டை விட அதிகம். பிற சேதங்கள்  86,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேத மடைந்துள்ளன அல்லது முழுமையாக அழிந்துள்ளன. ரயில் பாதைகளில் மூன்றில் இரண்டு பங்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. முக்கியச் சாலைகள் மற்றும் பாலங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்துள் ளன. விவசாய நிலங்கள் மற்றும் நீர்ப் பாசனக் கட்டமைப்புகளும் பாதிக்கப் பட்டுள்ளன. அதாவது இந்த புயல் இலங்கை மக்களின்  சமூக  மற்றும் பொருளாதாரத்தை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது.   இந்தப் பேரிடரில் பலியான மக்க ளில் மலைப்பகுதியினரே அதிகம்.  முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல், மோசமான நிர்வாகம் ஆகிய வற்றுடன் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பங்கும் இந்த மோசமான பாதிப்புகளுக்கு  ஒரு காரணமாக உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தேயிலை, இரப்பர் போன்ற ஏற்றுமதிப் பயிர்களுக்காக மலைகளை அழித்தனர். இது இன்று வரை மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவு களால் தீவிரமான பாதிப்புகள் ஏற்படக் காரணமாக உள்ளன.  குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு வரப்பட்ட மலையகத் தமிழர்கள் இந்த நிலச்சரிவுகளில் பெரும் பாதிப்பை சந்தித்தவர்களாக உள்ளனர். இவர்களில் பலர் நிலம் இல்லாமல், வேலை செய்யும் தோட்டங்களின் ‘லைன் வீடுகளில்’ வசிக்கின்றனர்.  இவர்கள் தான் இலங்கையிலேயே அதிக வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ளும் மக்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என ஆய்வாளர் ஷிரான் இலன்பெருமா தெரிவித்துள்ளார்.  இலங்கைக்கு கடன் கொடுத்த சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வ தேச அமைப்புகளின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம், அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. கடனுக்காக ஆண்டுதோறும் அரசாங்கச் செலவினத்தில்  30 சதவீதம் வட்டியாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் மறுசீரமைப்புக்கான செலவு மிக அதிகமாக இருக்கும் எனவும் மதிப்பிடப் பட்டுள்ளது.