tamilnadu

img

சிலுவத்தூரில் வாலிபர்கள் ரத்த தானம்

திண்டுக்கல், ஜுன்.5 திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. ஆவிளிபடடி ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் பாலச்சந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி,   ஒன்றியச் செயலாளர் சிலம்பரசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கார்த்திக், மற்றும் பிரதீப், சத்தியமூர்த்தி, ஆகியோர் பங்கேற்றனர். அரசு ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி ,சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 25க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர்.