tamilnadu

img

அதிமுகவை துண்டாட பாஜக சதி சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை

அதிமுகவை துண்டாட பாஜக சதி சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை

திருவாரூர், செப்.7-  “அதிமுகவை துண்டு துண்டாக  ஆக்குவதில் பாரதிய ஜனதா கட்சி பின்புலத்திலிருந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனை அதி முகவில் இருப்பவர்கள் உணர வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் பெ.சண்முகம் எச்சரித்தார். ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டச் செயலா ளர் டி.முருகையன் இல்ல திரு மண விழாவிற்கு வருகை தந்த  பெ.சண்முகம், செய்தியாளர்களி டம் பேசுகையில், “அதிமுக குழுக் கள் ஒன்றாக சேர்வதற்கான வாய்ப்பே கிடையாது. மேலும் மேலும் பாஜக-அதிமுக கூட்டணி  பலவீனமடைந்து கொண்டிருக்கி றது. இது எதிர்பார்த்த ஒன்றுதான்” என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி குறைப்பு: தண்டனைக்குப் பிறகு  சிறிய மாற்றம் மோடி அரசின் வரிக் கொள்கை யை கடுமையாக விமர்சித்த பெ. சண்முகம், “முதுகெலும்பை ஒடிக்  கும் அளவுக்கு கடந்த எட்டு வருட  காலமாக பல்வேறு வகையில் வரியை உயர்த்தி, எட்டு வருடங்கள் கழித்து சிறிதளவு தான் வரியை குறைத்து இருக்கிறார்கள். பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் வரியை வசூலித்து விட்டு சில ஆயி ரம் ரூபாய் குறைத்து இருக்கி றார்கள்” என்று கூறினார். “ஜிஎஸ்டி வரி குறைப்பு தீபாவளி  பரிசு என்று பிரதமர் மோடி கூறு கிறார். இந்த வரி குறைப்பு தீபா வளி பரிசு என்றால், இவ்வளவு காலம் தண்டனை கொடுத்தீர்களா என்று அவரை நான் கேள்வி கேட்க  விரும்புகிறேன்” என்று சணமுகம் கேள்வி எழுப்பினார். டிரம்ப் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்து பேசிய பெ.சண்முகம், “இந்தியாவை நம்பர் ஒன் எதிரி யாக கருதுகிறார். அமெரிக்காவை விட்டுவிட்டு வேறு எந்த நாடுகளில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு இருக்கி றது என்பதை ஒன்றிய அரசு யோசிக்க வேண்டும்” என்று தெரி வித்தார். முதல்வரின் அந்நிய மூலதன ஈர்ப்பு முயற்சிகளை பாராட்டிய அவர், “தற்போதுள்ள சூழலில் அந்நிய மூலதனம் தவிர்க்க முடி யாத ஒன்று. உலகம் முழுவதும் அந்நிய மூலதனத்தை ஈர்க்க தமிழ் நாட்டின் முதல்வர் மேற்கொண்டு வரும் செயல் வரவேற்கத்தக்க நல்ல முயற்சி” என்று கூறினார். யெச்சூரி நினைவாக  உடல் தான நிகழ்வு கட்சியின் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சீதா ராம் யெச்சூரி நினைவாக, செப்டம்  பர் 15-ஆம் தேதி தமிழ்நாடு முழு வதும் உடல் தானம் மற்றும் கண் தான பதிவு நிகழ்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தார். “கட்சியினர் மட்டுமின்றி அனைவரும் உடல் தானம் செய்திட முன் வர வேண் டும்” என்று வேண்டுகோள் விடுத் தார். செய்தியாளர் சந்திப்பில் மாநி லக் குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாக ராஜன், வீ.அமிர்தலிங்கம் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.