பீகார் வாக்காளர் உரிமை பறிப்பு இன்று சிபிஎம் போராட்டம்
சென்னை, ஆக. 7 - பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் லட்சக் கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவலின் படி ஆகஸ்ட் 8 (இன்று) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது.