அண்டை மாவட்டங்களுக்கு ஆட்டோக்கள் சென்று வர அனுமதி வழங்குக! ஆட்டோ சங்க தஞ்சை மாவட்ட பேரவை கோரிக்கை
கும்பகோணம், செப். 1- சிஐடியு ஆட்டோ சங்க தஞ்சை மாவட்ட சிறப்பு பேரவை கும்பகோணத்தில் நடைபெற்றது. பேரவைக்கு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஆர். ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் ஆர். சங்கர் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் ம. கண்ணன் பேசினார். மாநாட்டை வாழ்த்தி கும்பகோணம் மாநகர மேயர் சரவணன், மாமன்ற உறுப்பினர் ஏ.செல்வம், மாநகர கௌரவத் தலைவர் கே. செந்தில்குமார் ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் பேசினார். பேரவையில், அண்டை மாவட்டங்களுக்கு பயணியர் ஆட்டோக்கள் சென்றுவர 100 கிலோ மீட்டர் வரை அனுமதி வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் கேஸ் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில், தஞ்சை மாவட்டத் தலைவராக சி. ஜெயபால், செயலாளராக ஆர். ஜெயக்குமார், பொருளாளராக எம்.ராஜன், நிர்வாகிகளாக கே. செந்தில்குமார், ஆர்.சங்கர், ஏ. ஜெயராஜ், டி.ஜோசப் தர்மராஜ், சசிகுமார், செல்லத்துரை, ஜார்ஜ், ஆரோக்கியதாஸ், பழனிவேல் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநகர பொருளாளர் ஜி. கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.