தனியார் கல்லூரியில் தட்டச்சு தேர்வு
நாமக்கல், செப்.1- குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தட்டச்சு தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஸ்ரீராகவேந் திரா பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில், அரசு தட் டச்சு தேர்வு சனி மற்றும் ஞாயிறன்று நடைபெற்றது. முதன்மை கண்காணிப்பாளராக கல்லூரி முதல் வர் விஜயகுமார், துணை கண்காணிப்பாளராக எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியை முத்து வேலம்மையார் ஆகியோர் பணியாற்றினர். இத்தேர்வில் 38 தட்டச்சு பயிலகங்கள் மூலம் மாண வர்கள் பங்கேற்றனர். இளநிலை ஆங்கிலம் 732, இள நிலை தமிழ் 280, முதுநிலை ஆங்கிலம் 290, முதுநிலை தமிழ் 189, முன் இளநிலை ஆங்கிலம் 11, முன் இள நிலை தமிழ் 1, அதிவேக தட்டச்சு தமிழ் 1 என மொத் தம் ஆயிரத்து 504 தேர்வர்கள் பங்கேற்றனர்.