tamilnadu

img

ஐஓபி வங்கியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஐஓபி வங்கியின் நிர்வாக சீர்கேட்டை  கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்'

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் பகுதியில் இயங்கி வரும் ஐஓபி வங்கியின் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது.    விவசாய மற்றும் சிறு தொழில் கடன்  கேட்டு விண்ணப்பித்த வாடிக்கையா ளர்களை அலட்சியபடுத்தி அலைகழிக்க கூடாது. நகைக் கடன் மற்றும் பணம் எடுக்க  வரும் வாடிக்கையாளர்களை நாள் முழு வதும் காக்க வைத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்க கூடாது. வங்கிக்கு வரும் வாடிக்கை யாளர்களை அதிகார தோரணையில் பேசி  வரும் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிஎம் மற்றும் வரவு-செலவு பதிவு எந்திரம் (Entry Machine) முறையாக பரா மரிக்காததை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் சி.வி.ஆர்  ஜீவானந்தம் தலைமை வகித்தார். வங்கி யின் நிர்வாக சீர்க்கேட்டினை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், சீர்காழி வட்டாட்சியர் தலைமை யில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இக்கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் சரி செய்வதாக உறுதியளித்ததன் பேரில், ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் கே. கேசவன்,  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜெயமாலா, கிளைச் செயலாளர்கள் திரு ஞானம், கோபிநாத், பாலகிருஷ்ணன், வாலிபர்  சங்க ஒன்றியத் தலைவர் லெனின் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் மீது  நடவடிக்கை கோரி மாணவர் சங்கம் மனு

ருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்  குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடந்தது.  கூட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன் ஆட்சிய ரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை பள்ளியின் தாளாளர் அடிக்கும் காட்சிகள் செய்தி ஊடகங்களில் வெளியானது. பாதிக்கப் பட்ட மாணவர் பிரியன் காந்தியை, பொன் மலை காவல் உதவி ஆய்வாளர் வினோத்  என்பவர் இரண்டு காவலர்களை பள்ளி மாணவரின் வீட்டிற்கு அனுப்பி, பெற்றோர் அனுமதியில்லாமல் கட்டாயப் படுத்தி குற்றவாளியை போல காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இது வரை காவல் உதவி ஆய்வாளர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர்  உடனடியாக காவல் உதவி  ஆய்வாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.