tamilnadu

img

அணுகு சாலை அமைக்கக் கோரி சிபிஎம் மறியல்

அணுகு சாலை அமைக்கக் கோரி சிபிஎம் மறியல்

திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை  அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் இப்பகுதி சாலை விபத்தில் 1500-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தும், அணுகு சாலை அமைப்பதை இழுத்தடிப்பதை  கைவிட்டு உடனே அமைக்க வேண்டும்.  2019 ஆம் ஆண்டில் நீதிமன்ற தீர்ப்பை மீறி சாலையின் அகலம் 45 மீட்டர் என்பதை 33 மீட்டராக குறைத் ததை கைவிட வேண்டும். மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 33 மீட்டராக குறைப்பு என்ற பிர மாண பத்திரத்தை திரும்ப பெற வேண்டும். உடனடியாக நிலங்களை கையகப்படுத்தி சர்வீஸ் சாலை அமைக் கும் பணியை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதிக் குழு சார்பில் திங்க ளன்று கைலாஷ்நகர் அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சிபிஎம் காட்டூர் பகுதிக்குழு செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலா ளர் வெற்றிச்செல்வம், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் பேசினர்.  போராட்டத்தில் ஈடுபட்ட மூத்த தோழர் கே.சி.பாண்டியன், கிளைச் செயலாளர்கள் சண்முகவேல், ரவிச் சந்திரன், பகுதி குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.