பொது வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வாழ்த்து!
புதுதில்லி, பிப். 12 - அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை மகத் தான வெற்றிபெறச் செய்த தொழிலாளர் வர்க்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு, வாழ்த்துக்களையும் பாராட்டு தல்களையும் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வியாழக்கிழமை (பிப்.12), வெற்றிகரமாக நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்திற் காக, நமது நாட்டின் தொழிலா ளர் வர்க்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வாழ்த்துகிறது. தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒன்றுபட்ட போராட்டம்! தொழிலாளர்க்கு விரோத மான நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் ரத்து உள்பட பாஜக தலைமையி லான ஒன்றிய அரசின் பிற தொழிலாளர் விரோத - விவசாயி கள் விரோத மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, விவசாயிகளும் விவ சாயத் தொழிலாளர்களும், தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து மாபெரும் போ ராட்டத்தை நடத்தியுள்ளனர். தொழிலாளர் வர்க்கம் தனது குரலை உரக்கவும் தெளிவாக வும் ஒலித்துள்ளது. இவ்வாறு போராடும் தொழி லாளர்கள் - விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களு டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்டு நிற்கிறது என் பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறது. தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறுக! தொழிலாளர்களுக்கு விரோ தமான நான்கு தொழிலாளர் தொகுப்புகளையும் ஒன்றிய அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; தங்களின் வீரஞ்செறிந்த போராட்டங் களால் தொழிலாளர்கள் ஏற் கெனவே வென்றெடுத்த உரி மைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத் திற்கு மாற்றாக கொண்டுவரப் பட்டுள்ள ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், மின்சார விநியோ கத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டம் ரத்து செய் யப்பட வேண்டும், விதை சட்ட முன்வடிவு ரத்து செய்யப்பட வேண்டும், குறிப்பாக இந்திய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுவாக மக்களின் நலன்களுக்கு தீங்கு விளை விக்கும் விதத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் கை யெழுத்திட்ட பல்வேறு தன்னிச் சையான வர்த்தக ஒப்பந்தங்களி லிருந்தும் விலக வேண்டும். இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தியே வியாழனன்று மாபெரும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ந.நி.)