tamilnadu

img

சிபிஎம் குமரி மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது

நாகர்கோவில், நவ.30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியா குமரி மாவட்ட 24 ஆவது மாநாடு நவ.30 (சனிக்கிழமை) காலை நாகர்கோவிலில் நற்றமிழ் திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டுக் கொடியை மூத்த தோழர் எஸ்.ராமச் சந்திரன் ஏற்றி வைத்தார். மாநாட்டுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாதுரை, ஜஸ்டின், மிக்கேல் நாயகி தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.ரெஜீஸ்குமார் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். எம்.அகமது உசேன் வரவேற் றார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முக மது துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வேலை அறிக்கையும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன்  வரவு-செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். முன்னதாக சனிக்கிழமை காலை குமரி மாவட்டத்தின் ஐம்பெரும் தலைவர்களின் பெயரால்  நினைவுச்சுடர்கள் மாநாட்டுத் திடலுக்கு கொண்டு  வரப்பட்டன. மாத்தூரில் இருந்து ஜே.ஹேமச்சந்தி ரன் நினைவுச் சுடர் பயணத்தை ஆர்.வில்சன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் தலைமையில் கொண்டு வரப்பட்டது. அதனை மாநில செயற்குழு உறுப்பி னர் கே.கனகராஜ் பெற்றுக் கொண்டார். ஜி.எஸ்.மணி நினைவுச் சுடர் பயணத்தை குழித்துறை வெட்டுமணியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் துவக்கி வைத்தார். மார்த்தாண் டம் வட்டாரச் செயலாளர் எம்.சர்தார்ஷா தலைமை யில் கொண்டு வரப்பட்ட சுடரை மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது பெற்றுக் கொண்டார். வெட்டுமணியில் இருந்து டி.மணி நினைவுச் சுடர் பயணத்தை மாவட்டக் குழு உறுப்பினர் என்.மோகன்குமார் துவக்கி வைத்தார். பளுகல் வட்டாரச் செயலாளர் கே.சங்கர் தலைமையில் கொண்டு வரப்பட்ட சுடரை மூத்த தோழர் எஸ். செலஸ்டின் பெற்றுக் கொண்டார். பி.திவாகரன் நினைவுச் சுடர் பயணத்தை செறுகோலில் மாவட் டக் குழு உறுப்பினர் எம்.மேரி ஸ்டெல்லாபாய் துவக்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் வ.சந்திரகலா தலைமையில் கொண்டு வரப்பட்ட சுடரை மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன்  பெற்றுக் கொண்டார். பி.பெருமாள் நினைவுச்சுடர் பயணத்தை மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ரெகு பதி துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.அந்தோணி தலைமையில் கொண்டு வரப்பட்ட சுடரை, மூத்த தோழர் என்.முருகேசன் பெற்றுக் கொண்டார். மாநாட்டை துவக்கி வைத்து  எஸ்.நூர்முகமது பேசினார்.