tamilnadu

img

மதுரை தொகுதி சிபிஎம் தேர்தல் அறிக்கை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் மேற்கொள்ள உள்ள வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய மதுரை தொகுதி தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆர்.நல்லகண்ணு வெளியிட்டார். அதை அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பைச் சேர்ந்த் முருகேசன், மதுரை மாநகராட்சி தினக்கூலி தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் ஜி.முத்துக்குமார், விவசாயிகள் அமைப்பு சார்பில் கரைச்சாமி, இளைஞர்கள் அமைப்பு சார்பில் முஹமது தாலிப், பெண்கள் அமைப்பு சார்பில் பி.ஈஸ்வரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.