இடதுசாரி அரசியலில் சிபிஎம் மாநாடு ஒரு திருப்புமுனையாக அமையும்! பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன் பேச்சு
இந்திய 24-ஆவது மாநாடு, இடது சாரி அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்றும் தார்மீக நியாயத்தின் அடிப்படையில் இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமை மிக அவசியம் என்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொ துச்செயலாளர் ஜி. தேவராஜன் தெரி வித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டை யொட்டி, புதனன்று நடைபெற்ற பொது மாநாட்டில் ஜி. தேவராஜன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது: செங்கொடியை தாங்கியுள்ள 7 தொழிற்சங்கங்கள் “உழைப்பாளிகள், விவசாயிகள், விளிம்பு நிலை மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு நாம் தீர்மானகரமாக முடிவெடுக்க வேண்டும். இந்திய அர சியல் வானில் கார்ப்பரேட், நவ தாராள மயக் கொள்கைகளுக்கு எதிராக இடது சாரிகள் அணிதிரட்டும் போது, அந்த களப்போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைக்கிறது. தொழிலாளர்கள், விவசாயி கள் இடதுசாரிகளுக்கு ஆதரவு தருகின்ற னர். 11 மத்தியத் தொழிற்சங்கங்களில் 7 சங்கங்கள் செங்கொடியைப் பற்றி நிற்கின்றன. அமைப்பு சார்ந்த மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் என அனை வரும் வீதிகளில் திரண்டு போராடு கின்றனர். தேர்தல் ஆதரவாக மாற்ற வேண்டும் மக்களின் இந்த ஆதரவை தேர்தல் ஆதரவாக மாற்ற வேண்டும். களப் போராட்டங்களில், வீதிகளில் கிடைக்கும் ஆதரவை தேர்தல்களில் வாக்குகளாக மாற்ற வேண்டும். இதுபற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டும். கொள்கை முடிவெடுக் கும் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இடதுசாரிகளின் எண்ணிக்கை பலம் என்ன என்று கேட்கின்றனர். நமது பழைய வேலைமுறை நமக்குச் சில வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக் கின்றன. ஆனால் இது போதுமானதல்ல. தற்போதுள்ள திட்டவட்டமான சூழலை ஆய்வு செய்து, சமூக ஊடகங்கள் மூல மாகவும் நமது அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நம் அடிப்ப டைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல், நம்முடைய தொடர்பு முறையைப் புதுப்பிக்க வேண்டும். இடதுசாரிகள் ஒற்றுமை தார்மீகமானது முதலாளித்துவக் கொள்கைகளால் விவசாய நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, சாதி- மதப் பிரச்ச னையை தூண்டிவிடுவது என நெருக்க டியான சூழலில், நாம் புதிய முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இடதுசாரிகள் ஒற்றுமைக்கான அழைப்பு என்பது வெறும் அரசியல்ரீதியான அறைகூவல் மட்டுமல்ல, தார்மீக நியாயத்தின் அடிப்படையில் இடதுசாரி கள் ஒற்றுமை மிக முக்கியமான தவிர்க்க முடியாத தேவையாகும். இந்த மாநாட்டில் விவாதித்து எடுக்கும் முடிவுகள் இந்தியாவில் ஒரு இடதுசாரி திருப்பு முனையாக புதிய சகாப்தத்தை உருவாக்கும்.” இவ்வாறு ஜி. தேவராஜன் பேசினார்.