tamilnadu

img

மயிலாடுதுறையில் சிபிஎம் அகில இந்திய மாநாடு கருத்தரங்கம் - ஜி.ராமகிருஷ்ணனிடம் நிதியளிப்பு

மயிலாடுதுறையில் சிபிஎம் அகில இந்திய மாநாடு கருத்தரங்கம் -  ஜி.ராமகிருஷ்ணனிடம் நிதியளிப்பு

லாடுதுறை, மார்ச் 13-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24ஆவது அகில இந்திய மாநாடு நிதியளிப்பு கருத்தரங்கம் மயி லாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் வியாழனன்று நடை பெற்றது. அண்ணா மண்டபத்தில் நடந்த கருத்தரங்கிற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். “மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும்” என்ற தலைப்பில் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன் கருத்துரையாற்றி னார். அகில இந்திய மாநாட்டு நிதி யாக மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பில் ஏற்கனவே ரூ.7 லட்சம் வழங் கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட நிதியாக ரூ.1 லட்சத்தை மாவ ட்டச் செயலாளர் பி. சீனிவாசன், ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.  இக்கருத்தரங்கில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்திரன், சி.விஜய காந்த், ஜி.வெண்ணிலா, கே.பி.மார்க்ஸ், ஏ.அமுல் காஸ்ட்ரோ, டி.ஜி. ரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர்கள் டி.துரைக்கண்ணு (மயிலாடுதுறை நகரம்), கே.கேசவன், பி.ராமகுரு, எஸ். ஞானப்பிரகாசம் மற்றும் மாவ ட்டக்குழு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள், அரங்க பொறுப்பாளர்கள், உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். 

உண்டியலில் சேர்த்து வைத்த ரூ.1,110 அகில இந்திய மாநாட்டு நிதியாக  ஜி.ராமகிருஷ்ணனிடம் தந்த இரண்டரை வயது “காம்ரேட்”

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24ஆவது மாநாட்டு நிதியளிப்பு கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது.  இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியக் குழு உறுப்பினரான பொன்செய் கிராமத்தில் வசிக்கும் கபிலன்-வினோதா ஆகியோரின் காம்ரேட் என்கிற இரண்டரை வயதான சிறுவன் கடந்த இரண்டு மாத காலமாக பணம், காசுகளை சேர்த்து வைத்த உண்டியலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் மாநாடு நிதியாக வழங்கி மகிழ்ந்தார்.  பெற்றோர்கள், உறவினர்கள் தந்த சிறு, சிறு ரூபாய்களை சேர்த்து வைத்து மாநாட்டு நிதியாக தந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தோழர்.காம்ரேட் தந்த உண்டியலில் 1,110 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.