தூத்துக்குடி, பிப்.7 - தூத்துக்குடி மாசிலா மணிபுரத்தில் உள்ள சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அகில இந்திய மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சு னன் தலைமையில் நடை பெற்றது. இதில், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பி னர் கே.அர்ச்சுனன், மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம் ஆகியோர் உரை யாற்றினர். மாவட்டச் செயற் குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மூத்த தோழர்கள் இசக்கிமுத்து, மல்லிகா, ஜவகர், தேவ பிர காஷ், பொன்ராஜ், த.சீனி வாசன், பன்னீர்செல்வம், ஜெயபாண்டியன், வை.பாலு, மோகன்தாஸ், ஜி.ராமசுப்பு, பஞ்ச கல்யாணி, திருத்துவராஜ், இடைக்கமிட்டி செயலா ளர்கள், வர்க்க வெகுஜன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வரவேற்புக் குழு அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு தலைவ ராக கே.எஸ்.அர்ச்சுனன், செயலாளராக கே.பி.ஆறு முகம், பொருளாளராக கு. ரவீந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கட்சியின் மாவட்ட செயற் குழு - மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், வர்க்க வெகுஜன அரங்கங் களின் தலைவர்கள், செய லாளர், பொருளாளர் உள்ளிட்ட 150 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப் பட்டது. மாநாட்டு நிதி தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத்-திடம் அகில இந்திய மாநாட்டு நிதியாக முதல் கட்டமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப் பட்டது.