tamilnadu

img

பெண் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பேரவை

பெண் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பேரவை

அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்  குழு சார்பில் ஞாயிறன்று முத்தரசநல்லூரில் பெண் உரிமையை பாதுகாத்திட வலி யுறுத்தி, பெண் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை நடந்தது. கூட்டத்திற்கு ஆர்த்தி தலைமை வகித்தார்.  பேரவையை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன் துவக்கி வைத்தார். சங்க ஒருங்கிணைப்பாளர் வசந்தாமணி, மாதர்  சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செய லாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றியத் தலை வர் நடராஜன், மாவட்டத் தலைவர் தங்க துரை, மாவட்டப் பொருளாளர் இளங்கோ வன், ஒன்றியச் செயலாளர் ஜோதிமுருகன், ‘பெண் அன்றும் இன்றும்’ நூல் ஆசிரியர் நர்மதா தேவி, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.  கூட்டத்தில், “சம வேலைக்கு சம ஊதி யம் வழங்க வேண்டும். பாதுகாப்புடன் கூடிய  வேலை வழங்க வேண்டும். உழைப்புச் சுரண்டலை தடுக்க வேண்டும். பணியி டத்தில் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி சம்பளம் ரூ.600 வழங்க வேண்டும். 13 ஆண்டு காலமாக இலவச வீட்டு மனைக்கேட்டு தொடர்ந்து போராடும் முத்தரசநல்லூரில் உள்ள 59 விவசாயத் தொழிலாளருக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். 10 ஆண்டு காலமாக குடிமனை பட்டா  கேட்டு தொடர்ந்து போராடி வரும் காவல் காரபாளையம் பனைமந்தை தெருவில்  குடியிருக்கும் 11 விவசாயத் தொழிலா ளர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.