tamilnadu

img

தென்மாவட்டங்களில் தொடர் மழை... அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்குமா???    

மதுரை 
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான முதல் மிதமான அளவில் கனமழை பெய்து வருகிறது. சீசன் இல்லாத நேரத்தில் மழை பொழிவதால் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களின் பெரும்பாலன பகுதிகளில் நெற்பயிர்கள் நீருக்குள் மூழ்கியுள்ளது. 

இந்நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தொடர் மழை காரணமாக பல்வேறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது தொடர் மழை  வருகிறது. இதனால் நாளை (ஜன., 14) நடைபெறும் உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி பங்கேற்கிறார் என்பது குறிபிடத்தக்கது.