வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் டெங்கு பாதிப்பு பரவலாக ஏற்பட்டு வருகிறது.
மதுரையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 47 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட 47 பேர் மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு தடுப்பு பணிகளில் 1087 களப் பணியாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மருந்து தெளித்தல் மற்றும் வீடுகள், கழிவுகள், குப்பை கூழங்களில் மருந்து தெளித்தல், கணக்கெடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.