ஒப்புதல் வாக்குமூலம் வாக்காளர்
சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கை யை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கி றது பாஜக. ஆனால் அக்கட்சியின் தலைவர்களும் ஒருவரும், உத்தரப்பிரேதேச அமைச்சர்களில் ஒருவருமான ரவீந்திர ஜெய்ஸ்வால், அந்த நட வடிக்கையில் ஏராளமான குளறுபடிகள் என்று குற்றம் சாட்டியுள்ளார். அவரது தொகுதியான வடக்கு வாரணாசியில் 9,000 வாக்காளர்கள் பல வாக்குச்சாவடிகளில் இடம் பெற்றிருக்கிறார் கள். இந்த நடவடிக்கையில் நிறைய குளறுபடி கள் உள்ளன என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டுகளுக்கு இது வலு சேர்க்கிறது. இவரது குற்றச்சாட்டால் பாஜகவின் தலைமை அதிர்ந்து போயுள்ளது. கட்சிக்காரர்களோ குழம்பி விட் டார்கள். இந்த நடவடிக்கையை எதிர்த்து சமாஜ்வாதிக் கட்சியினர் பேசுகிறபோது, எப்படி எதிர்க்க முடியும் என்று கைகளைப் பிசைந்து நிற்கிறார்கள். எதிர்க்கட்சியினர் நிமிர்ந்து நிற்கின்றனர்.
காத்திருப்பு அஜித் பவாரின்
திடீர் மறைவால் தேசிய வாத காங்கிரசின் இரண்டு பிரிவுகளும் இணைவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அஜித் பவார் தலைமையிலான பிரிவில் உள்ள கட்சிக்காரர்கள் பெரும்பாலும் சரத் பவாரின் தலைமையில் ஒருங்கிணையவே விரும்புகிறார்கள். ஆனால், பல்வேறு வழக்குகளில் சிக்கியதால் பாஜக பக்கம் சாய்ந்த தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அஜித் பவா ரின் துணைவியாரும், தற்போது துணை முதலமைச்சராக பொறுப்பும் ஏற்றிருக்கும் சுனேத்ரா மீதும் வழக்குகள் உள்ளன. அதைக் காட்டிதான் உடனடியாகப் பொறுப்பேற்க வைத்திருக்கிறார்கள். இரு பிரிவுகளும் இணைந்து விடக்கூடாது என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. கட்சி பிளவுபட்டா லும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அரசி யல் நோக்கர்கள். சரத் பவாரோ, காத்திருக்கிறார்.
எப்போ வரும்? “சார்...
அந்த யூனிபார்ம் வாங்கப் பணம்..” என்று இழுத்த வரைப் பார்த்த பள்ளி அலுவலர், “என்ன.. உங்க கணக்கப் பாருங்க, சார்.. எத்தனை தடவை சொல்லிருக்கோம்” என்றார். “சார்.. இப்புடித்தான் சொல்லிட்டே இருக் கீங்க.. வருஷமே முடியப் போகுது”. இது ஒரு தில்லி அரசுப்பள்ளி யில் பயிலும் மாணவர் ஒரு வரின் தந்தையின் குமுறல். ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ,1,670 தருவதற்கான திட்டம் தில்லியில் உள்ளது. 2025-26ஆம் கல்வியாண்டுக் கான நிதி இன்னும் தரப்படவில்லை. 1,500 தில்லி மாநக ராட்சிப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 32 ஆயிரம் மாணவர் களின் நிலை இதுதான். நிதியுதவி பெறாத மாணவர்களின் எண்ணிக்கையை தில்லி மாநகராட்சி ஆணையர் அஸ் வினி குமார் உறுதி செய்திருக்கிறார். அரசு இன்னும் பணம் தரவில்லை என்பதுதான் மாநகராட்சி நிர்வாகத்தின் பதிலாக உள்ளது. நடையாய், நடக்கிறார்கள் பெற்றோர்.
பஞ்சமில்லை
குஜராத்தில் பட்டியலினக் குடும்பத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. சூரத் நகருக்கு அருகில் உள்ள கிராமமொன்றில் பட்டி யலின வகுப்பைப் சேர்ந்த ஒரு வாலிபரும், பிற சமூ கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். பெண் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் ஊரை விட்டுச் சென்றனர். வாலிபரின் குடும்பம் கடுமை யாக மிரட்டப்பட்டதால் இருவரும் ஊர் திரும்பினர். ஆனால் தங்கள் இருவரையும் சேர்த்து வைக்க மாட்டார் கள் என்று தெரிந்ததால் ஒரே வாரத்தில் மீண்டும் ஊரை விட்டுச் சென்றுவிட்டார்கள். வாலிபரின் குடும்பத்தி னரை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து ஆதிக்க சமூகத்தினர் அடித்திருக்கிறார்கள். கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதா கியிருக்கிறார்கள். சமூக ஏற்றத்தாழ்வுகள் கடுமையாக நிலவும் குஜராத்தில், தீண்டாமை மற்றும் வன்கொடு மைகளுக்குப் பஞ்சமில்லை.
