tamilnadu

img

திருபுவனத்தில் தோழர் சா.ஜீவபாரதி படத்திறப்பு

திருபுவனத்தில் தோழர் சா.ஜீவபாரதி படத்திறப்பு

கும்பகோணம், ஜூலை 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர்களில் ஒருவரும் தஞ்சை மாவட்டக்  குழு உறுப்பினரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான தோழர் ஜீவபாரதி, கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலமானார். அவரது  உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களின் கல்வி ஆய்விற் காக உடல் தானம் செய்யப்பட்டது.  இந்நிலையில் அவரது சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத் தில் தோழர் சா. ஜீவபாரதி உருவப்பட திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை  வகித்தார்.  மூத்த உறுப்பினர்கள் நீலமேகம், சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ. வாசுகி, மறைந்த தோழர் ஜீவபாரதி உருவப்படத்தை திறந்து வைத்து புக ழஞ்சலி செலுத்தினார்.  நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப் பினர் மதுக்கூர் இராமலிங்கம், மூத்த தோழர்  என்.சீனிவாசன், மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சீனிவாசன், தமிழக அரசு  உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழி யன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராமலிங்கம், திமுக திருவிடைமருதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரஜெய பால், திருபுவனம் பேரூர் கழக செயலாளர்  எஸ்.கே.பஞ்சநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் செவ்வணக்கம் செலுத்தினர். தோழர் ஜீவ பாரதியின் மூத்த மகன் முருகன் நன்றி கூறி னார்.