தோழர் பி. சீனிவாசராவ் மகன் பி.எஸ். ராஜசேகர் மறைவு!
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர் பி. சீனிவாசராவின் புதல்வர் பி.எஸ். ராஜசேகர் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்ப தாவது: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலை போராட்ட வீரரும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாள ராக நீண்ட காலம் பணியாற்றியவரும், பண்ணை அடிமைத் தனத்தை எதிர்த்து போராடியவருமான தோழர் பி.எஸ்.ஆர். என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பி. சீனிவாசராவ் அவர்க ளின் மகன் எஸ்.ராஜசேகர் (69) உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்களன்று (17.03.2025) காலை கால மானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவர்களது உறவினர் களுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பி.எஸ்.ராஜசேகர் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னணி தலைவர் பி.துளசிநாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.