tamilnadu

img

தோழர் பி. செங்கோடன் மறைவு! சிபிஎம் இரங்கல்

தோழர் பி. செங்கோடன் மறைவு! சிபிஎம் இரங்கல்

சென்னை, ஜன. 7 - நாமக்கல் மாவட்டத்தில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் களில் ஒருவராகவும், சிறந்த தொழிற் சங்கவாதியாகத் திகழ்ந்தவருமான தோழர் பி. செங்கோடன் (வயது 84) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். “ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த தோழர் செங்கோடன் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தபோது தொழிற்சங்க நட வடிக்கைகளில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த வர். ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் விவசாய சங்கத்தில்  இணைந்து ஏழை விவசாயிகளையும், கிராமப்புற உழைப்பாளி மக்களையும் திரட்டுவதில் முக்கிய பாத்திரம்  வகித்தவர். கிராமப்புறங்களில் நிலவும் பண்ணை அடிமைத் தனத்திற்கு எதிராகவும், தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதி ராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும் பல்வேறு இயக்கங்களை முன்னின்று நடத்தியவர். விவசாய  தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். அவரது மறைவு கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தி னருக்கும், உறவினர்களுக்கும், இயக்க தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.